நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த மூன்று சிறுமிகள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த நிலையில் அனைவரும் இன்று காலை கடலில் குளிக்க சென்றனர்.
அப்போது கடல் சீற்றம் காரணமாக வந்த பெரிய கடல் அலையில் சிக்கி 3 சிறுமிகள் இழுத்துச் செல்லப்பட்டனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் சிறுமிகளை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது மூவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.