கனடா மருத்துவர் வருங்கால கணவர் என கனவில் மிதந்த இளம்பெண்! தெரியவந்த பகீர் உண்மை.. எச்சரிக்கை செய்தி


கனடாவில் மருத்துவராக பணிபுரிவதாக கூறி இளம்பெண்ணுக்கு திருமண ஆசை காட்டி ஏமாற்றி பெரியளவில் பணமோசடி செய்த நைஜீரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் புதுவை சுய்ப்ரேன் வீதியை சேர்ந்தவர் சுனைனா நரங். இவர் திருமணம் செய்து கொள்வதற்காக வெளிநாட்டு திருமண தகவல் மையம் ஒன்றில் பதிவு செய்திருந்தார்.

அப்போது இவரை தொடர்பு கொண்டு பேசியவர் தான் கனடாவில் மருத்துவராக பணிபுரிவதாக கூறினார். பின்னர் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர்.

இந்த நிலையில் அந்த நபர் கனடாவில் மருத்துவமனை கட்ட பணம் கேட்டுள்ளார். கனடா மருத்துவரை திருமணம் செய்ய போகிறோம் என மகிழ்ச்சி மற்றும் கனவில் இருந்த சுனைனா நரங் ரூ.54 லட்சத்தை அனுப்பி வைத்தார். அதன்பின் அவர் தனது செல்போனை சுவிட்ச்- ஆப் செய்தார். இதனால் சந்தேகம் அடைந்த சுனைனா நரங் சைபர் கிரைம் பொலிசில் புகார் செய்தார்.

கனடா மருத்துவர் வருங்கால கணவர் என கனவில் மிதந்த இளம்பெண்! தெரியவந்த பகீர் உண்மை.. எச்சரிக்கை செய்தி | Women Cheated Name Of Canada Doctor

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நைஜீரியாவை சேர்ந்த இமானுவேல் அனிடேபே (44) என்பவரை கைது செய்தனர்.

மற்றொரு மோசடி சம்பவம்

புதுவை நெல்லித்தோப்பு பெரியார் நகரை சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி ஜனனி. இவர் சென்னை விமான நிறுவனத்தில் வேலை வேண்டி கடந்த 2021-ல் விண்ணப்பித்து இருந்தார். அப்போது அவரது செல்போனில் பேசிய மர்ம நபர் விமான நிலையத்தில் வேலையில் சேர நேர்முகத் தேர்வுக்காக ரூ.1,800 பணம் செலுத்த வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதனை உண்மை என்று நம்பிய ஜனனி அந்த பணத்தை அனுப்பி வைத்துள்ளார். இதேபோல் பல்வேறு தவணைகளாக ஜனனி ரூ.14 லட்சத்து 48 ஆயிரத்து 680 கொடுத்துள்ளார். ஆனால் அவர் கூறியது போல சென்னை விமான நிலையத்தில் ஜனனிக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அவர் பணத்தை திருப்பி கேட்டபோது ஜனனியிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். கைது இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜனனி சைபர் கிரைம் பொலிசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் பொலிசார் விசாரணை நடத்தினர். அப்போது டெல்லியை சேர்ந்த விஜய்குமார் குப்தா (30) என்பவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே தனிப்படை பொலிசார் டெல்லி சென்று விஜய் குமார் குப்தாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். 

கனடா மருத்துவர் வருங்கால கணவர் என கனவில் மிதந்த இளம்பெண்! தெரியவந்த பகீர் உண்மை.. எச்சரிக்கை செய்தி | Women Cheated Name Of Canada Doctor



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.