காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் சேறும், சகதியுமாக காட்சியளித்த நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் மண்ணில் புதையுண்டன.
குந்தி வனத்தின் மலைபிரதேசப் பகுதியில் இன்று அதிகாலையில் திடீர் மேகவெடிப்பு ஏற்பட்டதை அடுத்து அங்கு பெய்த கனமழையால் நெடுஞ்சாலை சேறும், சகதியுமாக மாறியது.
பொக்லைன் இயந்திரம் உதவியுடன் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சேற்றில் சிக்கிய வாகனங்கள் மீட்கப்பட்டன.