கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வெளியாகும் ‘ஆனந்தபசார் பத்திரிகா’வின் நூற்றாண்டு விழா கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில், இந்தியாவின் புகழ் பெற்ற பொருளாதார நிபுணரும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்தியா சென் காணொலி மூலம் பங்கேற்று பேசியதாவது:இந்தியர்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்த முயற்சி செய்யப்படுகிறது. அரசியல் சந்தர்ப்பவாதத்துக்காக இந்து, முஸ்லிம் மக்களிடையே பிளவு ஏற்படுத்தப்படுகிறது. குற்றமே செய்யாத அப்பாவி மக்கள் சிறையில் தள்ளப்படுகின்றனர். நாடு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆன நிலையிலும், இந்த ஆங்கிலேயர் கால நடைமுறை பின்பற்றப்படுவது வேதனை அளிக்கிறது. நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலைகள், எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.இவ்வாறு அவர் பேசினார்.