கேஸ், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கையொன்றின் மூலம் ஜனாதிபதி இந்த விடயங்களைத் தெரவித்துள்ளார். கேஸ், எரிபொருள் உட்பட அத்தியவசியப் பொருட்கள் எதிர்வரும் 12 ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடையும். எதிர்க்கட்சியினரால் பரப்பப்படும் போலியான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் ஜனாதிபதி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்வரும் 12 ஆம் திகதியிலிருந்து கேஸ், எரிபொருள், மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தொடர்ச்சியாக பகிர்தளிக்கப்படும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.