கையில் கம்புடன் வந்த அம்மாவை கண்டதும் அடித்து பிடித்து சிறுவர்கள் தலைதெறிக்க ஓடும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. கேரள மாநிலத்தை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவர் இந்த வீடியோ காட்சிகளை பதிவு செய்திருக்கிறார்.
கேரளா மாநிலம் முழுவதும் தற்போது மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடப்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளிகளுக்கும் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வயநாடு, திருநெல்லி என்னும் பகுதியில் உள்ள வயல்வெளியில் மழை பெய்து கொண்டிருக்கும்போதும் ஒருசில சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர். மழையால் ஏற்பட்ட சேற்றில் குட்டிக் கரணம் அடித்தும், சகதியில் உருண்டு, பிரண்டும் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.
அந்த நேரத்தில் சிறுவர்களில் ஒருவரின் தாய் கையில் கம்புடன் வந்துள்ளார். அம்மா வருவதை பார்த்து சிறுவர்கள் அடிக்க, பிடிக்க வயல்வெளியை விட்டு தலைதெறிக்க ஓடி உள்ளனர். இந்த ரசகரமான காட்சிகளை வயநாடு பகுதியைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் தனது கேமராவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களதும் குழந்தை பருவம் ஞாபகம் வருவதாக பதிவிட்டும் வருகின்றனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகின்றன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM