நல்ல திறமையான ஊழியர்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் இந்தியாவின் தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களில் ஊழியர்கள் நல்ல சம்பளத்தை பெற்று வருவதாகவும் சம்பள உயர்வு காரணமாக ஊழியர்கள் உற்சாகத்துடன் பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஜியோ, ஏர்டெல்-க்கு போட்டியாக அதானி.. கடுப்பான முகேஷ் அம்பானி..!
தொலைத்தொடர்பு நிறுவனங்கள்
இந்தியாவின் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள், இந்த ஆண்டு அதிக சம்பள உயர்வை வழங்குகின்றன. குறிப்பாக இந்த நிதியாண்டில் 10-12% சம்பள உயர்வை வழங்கியுள்ளதாகவும், இது கடந்த சில ஆண்டுகளின் சராசரி உயர்வை விட அதிகம் என்றும் பணியாளர் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இந்த மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும், சராசரியாக 8-12% சம்பள உயர்வை அறிவித்துள்ளன.
ஊதிய உயர்வு
பெரும்பாலான நிறுவனங்கள் ஊதிய உயர்வை ஊழியர்களுக்கு அளித்துவிட்டதாகவும், ஒருசிலருக்கு இந்த மாதம் முதல் அதாவது ஜூலை முதல் சம்பள உயர்வு பெறுவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
திறமையான ஊழியர்கள்
5G சேவை விரைவில் தொடங்கவுள்ள நிலையில் முடிந்தவரை திறமையான ஊழியர்களை தக்கவைத்துக் கொள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விரும்புவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தொழில்நுட்ப பணியாளர்கள்
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பணிபுரியும் வாடிக்கையாளர்களை எதிர்கொள்ளும் வேலை செய்பவர்கள் மற்றும் தொழில்நுட்ப பின்னணியில் உள்ள பணியாளர்களுக்கு முக்கியத்துவம் தருவதாகவும், தொழில்நுட்ப பின்னணி உள்ளவர்கள் 5G தொழில்நுட்பத்திற்கு தேவை என்பதால் அவர்களது ஊதிய உயர்வு சதவிகிதம் அதிகம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு பகுப்பாய்வு, ஐஓடி மற்றும் மொபைல் ஆப் மேம்பாடு ஆகியவற்றில் பணிபுரியும் திறமையானவர்களுக்கு ஊதிய உயர்வு அள்ளி வழங்கப்பட்டுள்ளது.
சலுகைகள்
இதுகுறித்து பணியாளர் சேவை நிறுவனமான TeamLease Services நிறுவனத்தின் வணிகத் தலைவரான தேவல் சிங் கூறுகையில், தொலைத்தொடர்பு துறையில் உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்கள் வழங்குநர்கள், மெய்நிகர் நெட்வொர்க் ஆபரேட்டர்கள் மற்றும் பிற பிரிவுகள் உட்பட 4 மில்லியன் மக்கள் பணிபுரிகின்றனர். இந்த பிரிவுகளில் சிறந்த திறமையாளர்களுக்கு, குறிப்பாக புதிய தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு மற்ற நிறுவனங்களில் அதிக சம்பளம் தர தயாராக உள்ளனர். எனவே இந்த வகையான திறமைகள் உள்ளவர்களை அதிக ஊதியம் கொடுத்து நிறுவனங்கள் தக்கவைத்து கொள்கின்றன. மேலும் இவ்வகை ஊழியர்களுக்கு நல்ல சலுகைகளை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வழங்குகிறது’ என்று சிங் கூறினார்.
Telecommunication companies giving higher salary hikes amid talent war
Telecommunication companies giving higher salary hikes amid talent war |கை நிறைய கிடைக்குது… ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஊழியர்களுக்கு அடிச்சது லக்!