சிறுமி ஒருவரின் 24 வார கர்ப்பத்தை கலைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனுவில் தனது மகளை ஒருவர் ஏமாற்றிவிட்ட நிலையில், கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
மருத்துவ அவசரத்தை கவனத்தில் கொண்டு, மருத்துவருடன் வாட்ஸ் அப் காலில் பேசிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கர்ப்பத்தை கலைக்க அனுமதி அளித்தார்.