ரஷ்யா மற்றும் பெலாரஸ்க்கு சொந்தமான 111 ரயில் பெட்டிகள் உக்ரைனுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததை அடுத்து அதனை அந்த நாட்டின் அதிகாரிகள் சிறைப்பிடித்துள்ளனர்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையால், உலக அளவில் தானிய தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் மட்டுமில்லாமல், ரஷ்யா மற்றும் பெலாரஸ் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளால் உலக அரங்கில் கடுமையான உரத் தட்டுபாடும் அதிகரித்துள்ளது.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஷ்யா மற்றும் பெலாரஸ்க்கு சொந்தமான உரங்களை ஏற்றிக்கொண்டு உக்ரைனுக்குள் சுங்கவிதிகளை மீறி நுழைந்த 315 ரயில் பெட்டிகளை அந்த நாட்டின் அதிகாரிகள் சிறைப்பிடித்தனர்.
Another 111 #Russian and #Belarusian railway carriages were seized in Ukraine
Carriages were found during the investigation of financing actions aimed at seizing state power of #Ukraine.
The market value of carriages estimated at $2.7 million.
📰 National Police of Ukraine pic.twitter.com/VfX5dbbyNN
— NEXTA (@nexta_tv) July 9, 2022
இந்தநிலையில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கான நிதியளிப்பு ஆகியவற்றிக்கு எதிரான விசாரணையின் போது உக்ரைனிய அதிகாரிகள் ரஷ்யா மற்றும் பெலாரஸ்க்கு சொந்தமான 111 ரயில் பெட்டிகளை சிறைப்பிடித்துள்ளனர்.
உக்ரைனிய அதிகாரிகள் தற்போது சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
ரயில் பெட்டிகளின் மதிப்பு சுமார் 2.7 மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இதனை உக்ரைனிய தேசிய பொலிஸார்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: இலங்கையில் ஆர்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு; நிலைமை கட்டுக்குள் வர தீவிர நடவடிக்கை
கடந்த முறை உக்ரைனிய அதிகாரிகள் சிறைப்பிடித்த ரயில் பெட்டிகளின் மதிப்பு சுமார் 12 மில்லியன் டாலர் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.