ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே சுட்டு கொல்லப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபை இரங்கல் தெரிவித்து உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரஸ், ஜப்பான் முன்னாள் பிரதமர் அபேயின் ‘பயங்கரமான கொலையால் வருத்தமடைந்ததாக’ தெரிவித்துள்ளார்.
.‘அவர் பலதரப்புவாதத்தின் உறுதியான பாதுகாவலராகவும், மதிப்பிற்குரிய தலைவர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவாளராகவும் நினைவுகூரப்படுவார்’ என்று குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.
ஷின்ஜோ அபே சுட்டு கொல்லப்பட்டதற்கு பிரதமர் , இங்கிலாந்து பிரதமர் , ரஷிய ஜனாதிபதி அவுஸ்திரேலிய பிரதமர் ,இத்தாலி பிரதமர் தைவான் ஜனாதிபதி உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாரா நகர ரெயில் நிலையம் முன்பு நேற்று உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணிக்கு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ஷின்ஜோ அபே கலந்து கொண்டு உரையாற்றினார். சில நிமிடங்களில், அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த நபர் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில், அவர் கழுத்தில் குண்டு பாய்ந்துள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக அவசர சிகிச்சைக்காக நாரா மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் ஷின்ஜோ அபேயை காப்பாற்ற முடியவில்லை. உள்ளூர் நேரப்படி மாலை 5.03 மணிக்கு அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் அறிவித்ததமை குறிப்பிடத்தக்கது..