டெல்லியின் உஸ்மான்பூர் பகுதியில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் குற்றவாளி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். அவனது கூட்டாளிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
உஸ்மான்பூரை ஒட்டிய வனப்பகுதியில் சமூக விரோத கும்பல் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் அந்த இடத்தை சுற்றிவளைத்தனர்.
போலீசாரை கண்டதும் அந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டது. பதிலுக்கு போலீசார் சுட்டத்தில் ஆகாஷ் என்ற குற்றவாளி உயிரிழந்தார். மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மோதல் நடந்த இடத்திலிருந்து ஒரு கைத்துப்பாக்கி, 8 செல்போன்கள், 2 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் ஒரு கத்தியை போலீசார் கைப்பற்றியுள்ளனர். தப்பியோடிய மேலும் சிலரை தேடும் பணி நடைப்பெற்று வருகிறது.