போலி கணக்குகள் குறித்த தகவல்களை தராததை அடுத்து 44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கை 54 புள்ளி 20 டாலர் கொடுத்து வாங்க எலான் மஸ்க் ஒப்புக் கொண்ட நிலையில், பங்குச் சந்தையில், ட்விட்டரின் பங்கு மதிப்பு 7 சதவீதம் வரை சரிந்தன.
ட்விட்டரை வாங்கும் முடிவில் இருந்து எலான் மஸ்க் விலகினால் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக ட்விட்டர் தலைவர் பிரட் டெய்லோ தெரிவித்துள்ளார்.