மும்பை: இந்தியில் ‘ஷாகித்’, ‘சிட்டிலைட்ஸ்’, ‘அலிகார்’, ‘சிம்ரன்’ உள்பட பல படங்களை இயக்கியவர், ஹன்சல் மேத்தா. அவர் இயக்கிய ‘சிம்ரன்’ படத்தில் கங்கனா ரனவத் நடித்திருந்தார். இந்நிலையில், கங்கனாவை அவர் கடுமையாகச் சாடியுள்ளர். அவர் கூறியதாவது: சிம்ரன் என்ற கேரக்டர், சந்தீப் கவுர் என்ற பெண்ணை மையப்படுத்தி எழுதப்பட்டது. அந்தப் பெண் சூதாட்டத்தில் பணத்தை இழந்துவிட்டு, பிறகு வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்டவர். அவரைப்போலவே நாங்கள் கங்கனா கதாபாத்திரத்தை எழுதினோம். ஆனால், தான் எதைப் படமாக்க வேண்டுமென விரும்பினாரோ அதை எங்களை படமாக்க வைத்தார். அவர் நடிக்கும் எல்லா படமும் அவர் பற்றியே இருக்க வேண்டுமென நினைக்கிறார். இந்தி ‘தக்கத்’ படத்தில் ‘ஷீ இஸ் ஆன் ஃபயர்’ என்ற பாடலில் அவர் தற்பெருமையைத்தான் கூறியிருப்பார். அவர் ஒரு சிறந்த நடிகை என்பதில் மாற்றுக்கருத்து இல்லைதான். தற்பெருமை பிடித்தஅவருடன் பணிபுரிந்தது, இதுவரை நான் செய்த தவறுகளில் ஒன்று என்பது நிஜம்.