இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்-கின் வீட்டை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொழுத்தியுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜூலை 9ம் திகதியான இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட்ட போராட்டக் குழுவினர், அங்குள்ள நீச்சல்குளம், சமயலறை என ஆக்கிரமித்து கொண்டுள்ளனர்.
Protesters have broken into the private residence of Prime Minister Ranil Wickremesinghe and have set it on fire – PM’s office pic.twitter.com/yXGFvHbMKt
— Azzam Ameen (@AzzamAmeen) July 9, 2022
இலங்கையில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு போராட்டம் வெடித்ததை தொடர்ந்து, இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க ராஜினாமா செய்வதாக சனிக்கிழமை அறிவித்தார்.
இதுத் தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அனைத்து குடிமக்களின் பாதுகாப்பு உட்பட அரசாங்கத்தின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக, அனைத்துக் கட்சி அரசாங்கத்திற்கு வழி வகுக்கும் கட்சித் தலைவர்களின் சிறந்த பரிந்துரையை இன்று ஏற்றுக்கொள்கிறேன்.
இதற்கு வசதியாக நான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் அறிவித்தார்.
#WATCH | Sri Lanka: Amid massive unrest in the country, protestors set ablaze the private residence of Sri Lankan PM Ranil Wickremesinghe#SriLankaCrisis pic.twitter.com/BDkyScWpui
— ANI (@ANI) July 9, 2022
கூடுதல் செய்திகளுக்கு: இலங்கையின் தற்காலிக ஜனாதிபதி இவர் தான்! இறுதி முடிவு வெளியானது
இருப்பினும், ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ரணில் விக்கிரமசிங்-கின் அதிகாரப்பூர்வ வீட்டை தீ வைத்து கொழுத்தியுள்ளனர் என AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
To ensure the continuation of the Government including the safety of all citizens I accept the best recommendation of the Party Leaders today, to make way for an All-Party Government.
To facilitate this I will resign as Prime Minister.
— Ranil Wickremesinghe (@RW_UNP) July 9, 2022