நடிகர் தனுஷின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து ப்ளு டிக்கை நீங்கியுள்ள ட்விட்டர் நிர்வாகத்தின் செயல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். துள்ளுவதே இளமை தொடங்கி பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள தனுஷின் சமீபத்தில் படங்கள் கடுமையாக விமர்சனங்களை சநதித்து வருகிறது. அதிலும் தனது அனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக தனுஷ் அறிவித்ததில் இருந்து தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனுஷ் நடிப்பில் ஒடிடி தளத்தில் வெளியான மாறன் படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்த நிலையில், படுதோல்வியை சந்தித்தாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகி வரும் வாத்தி, மற்றும் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் உள்ளிட்ட படங்களில் தனுஷ் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.
தொடர்ந்து இயக்குநர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடி்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 18-ந் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் தாய்கிழவி என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் அனிருத் இருவரும் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் தனுஷ் அவ்வப்போது தனது படம் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிடுவது வழக்கம். இதில் சினிமா, அரசியல் விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் பிரபலங்களாக இருப்பவர்களின் ட்விட்டர் கணக்குகளில் ப்ளூ டிக் இருக்கும். ட்விட்டரில் போலி கணக்குகளை தெரிந்துகொள்ள முக்கியமான இந்த ப்ளூ டிக் பயன்படுகிறது. மேலும் இந்த டிக் அவர்களுக்கு ட்விட்டர் கொடுக்கும் அங்கீகரமாகும்.
இந்நிலையில் இதுவரை தனுஷின் ட்விட்டர் கணக்கு ப்ளூ டிக்குடன் இருந்த நிலையில், தற்போது அந்த டிக்கை நீங்கியுள்ளது ட்விட்டர் நிர்வாகம். இந்த செயலுக்கு என்ன காரணம் என்று ட்விட்டர் நிர்வாகம் இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை. ட்விட்டர் நிர்வாகத்தின் இந்த செயல் தனுஷ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சிறிது நேரத்தில் தனுஷின் ட்விட்டர் கணக்கிற்கு மீண்டும் ப்ளூ டிக் வழங்கப்பட்டது .
இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, மற்றும் நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்புவின் ட்விட்டர் கணக்கில் இருந்த ப்ளூ டிக் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“