நம்புங்க பாஸ்.. வெறும் ரூ.26 கட்டணத்தில் விமான பயணம்!

விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக விமான டிக்கெட்டுகளின் கட்டணம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் வெறும் 26 ரூபாயில் விமான பயணம் செய்யலாம் என்ற சலுகை அறிவிப்பு விமான பயணிகளுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆம்! 26 ரூபாயில் இந்தியாவிலிருந்து வியட்நாம் நாட்டிற்கும், வியட்நாமில் இருந்து இந்தியாவுக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வியட்ஜெட்

வியட்ஜெட் விமான நிறுவனம் இந்த சலுகையை விமான பயணிகளுக்காக ஒரு வாரம் மட்டும் வழங்குகிறது. ஜூலை மாதத்தில் இரட்டை 7/7 நாளை முன்னிட்டு, வியட்ஜெட் ஒரு வார கால டிக்கெட் தள்ளுபடியை 777,777 விமான பயணிகளுக்கு வெறும் ரூ. 26 கட்டணம் மட்டுமே வசூலிக்க உள்ளது.

சிறப்பு கட்டணம்

சிறப்பு கட்டணம்

இந்த சிறப்பு டிக்கெட்டுகள் வியட்ஜெட் நிறுவனத்தால் இயக்கப்படும் அனைத்து உள்நாட்டு விமானங்கள் மற்றும் அனைத்து சர்வதேச வழிகளிலும் முன்பதிவு செய்ய செல்லுபடியாகும். ஜூலை 7 முதல் ஜூலை 13 வரை இந்த சிறப்பு கட்டண டிக்கெட்டுக்களை பெற்று கொள்ளலாம். பயணத்திற்கான கால அளவு ஆகஸ்ட் 15, 2022 முதல் மார்ச் 26, 2023 வரை ஆகும்.

இணையதளம் - செயலி
 

இணையதளம் – செயலி

இந்த சிறப்பு டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்ய வியட்ஜெட் விமான நிறுவனத்தின் இணையதளமான www.vietjetair.com என்ற இணையதளத்திற்கு சென்று வாடிக்கையாளர்கள் பெற்று கொள்ளலாம். மேலும் வியட்ஜெட் ஏர் என்ற மொபைல் செயலி மூலம் இந்த சிறப்பு டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

 எந்தெந்த நாடுகளுக்கு?

எந்தெந்த நாடுகளுக்கு?

வியட்ஜெட் இணையதளத்தில் உள்ள தகவலின்படி, இந்த விளம்பர டிக்கெட்டுகள் வியட்நாமில் உள்ள உள்நாட்டு வழிகள் மற்றும் சர்வதேச வழித்தடங்களில் பொருந்தும். இந்தியா, கொரியா குடியரசு, ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள கவர்ச்சிகரமான இடங்களுக்கான இந்த சிறப்பு டிக்கெட்டுக்களை எடுத்து கொள்ளலாம். தேசிய விடுமுறை நாட்களில் மட்டும் சலுகை டிக்கெட்டுக்கள் கிடையாது.

 மும்பை-வியட்நாம்

மும்பை-வியட்நாம்

வியட்ஜெட் நிறுவனம் இந்திய நகரங்களான மும்பை மற்றும் வியட்நாமிய நகரமான ஹோ சி மின் நகரம்/ஹனோய் மற்றும் புது தில்லி/மும்பை முதல் ஃபூ குவோக் வரை சேவை செய்து வருகிறது.

புதுடெல்லி - வியட்நாம்

புதுடெல்லி – வியட்நாம்

புது தில்லியை ஹோ சி மின் நகரம் / ஹனோய் உடன் இணைக்கும் இரு நாடுகளின் முதல் நேரடி விமானச் சேவை ஏப்ரல் மாதமே தொடங்கியது. இந்த வழித்தடத்தில் ஒவ்வொரு வாரமும் 3 முதல் 4 விமானங்கள் இயக்கப்படுகின்றன. திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மும்பை-ஃபு குவோக் வழித்தடத்தில் 4 வாராந்திர விமானங்கள் தொடங்கும். புது தில்லி மற்றும் Phu Quoc இடையேயான சேவைகளும் செப்டம்பர் 9, 2022 முதல் தொடங்கவுள்ளது. இந்த விமானங்கள் ஒவ்வொரு புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Travel by air for only Rs 26. Vietjet announces flight tickets offer!

Travel by air for only Rs 26. Vietjet announces flight tickets offer! | நம்புங்க பாஸ்.. வெறும் ரூ.26 கட்டணத்தில் விமான பயணம்!

Story first published: Saturday, July 9, 2022, 7:07 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.