`நாட்டை மீண்டும் ஒருங்கிணைப்பதற்கு சரியான தருணம்’ – இங்கிலாந்து பிரதமர் பதவி போட்டியில் ரிஷி சுனக்

இங்கிலாந்தின் பிரதமராகப் பதவிவகித்து வந்த போரிஸ் ஜான்சன், இரண்டு நாள்களுக்கு முன்பு தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து போரிஸ் ஜான்சன் தற்போது தனது பிரதமர் பதவியையும், கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

அடுத்தகட்டமாக கன்சர்வேடிவ் கட்சி, கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வேலைகளைத் தொடங்கியுள்ளது. மேலும், கட்சி எம்.பி-க்களின் பெரும்பான்மை ஆதரவுடன் 2 பேர் தலைமை பொறுப்புக்குப் போட்டியிடுவார்கள் எனத் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன்

இந்த நிலையில், அரசின் கருவூல அதிபர் பதவியிலிருந்து விலகிய இந்திய வம்சாவளி ரிஷி சுனக்(49), பிரதமர் பதவியில் தாம் போட்டியிடப்போவதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

ரிஷி சுனக் தனது ட்விட்டர் பக்கத்தில், “யாராவது இந்த தருணத்தில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். அதனால்தான் கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவராகவும், உங்களின் பிரதம வேட்பாளராகவும் நான் நிற்கிறேன். அதுமட்டுமல்லாமல், இங்கிலாந்தின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும், நாட்டை மீண்டும் ஒருங்கிணைப்பதற்கும் சரியான தருணம் இதுதான்” என கூறியிருந்தார்.

இந்திய வம்சாவளி ரிஷி சுனக்

ரிஷி சுனக்கின் தாத்தா, பாட்டி பஞ்சாப்பிலிருந்து இங்கிலாந்தில் குடியேறியவர்கள். மேலும் ரிஷி சுனக், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தியின் மருமகனும் ஆவார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். போரிஸ் ஜான்சனுக்கு எதிராக சர்ச்சைகள் வெடித்த போது, ரிஷி சுனக் தனது அரசு பதவியிலிருந்து விலகியதால் காரணமாகவே, போரிஸ் ஜான்சன் அமைச்சரவையிலிருந்து மேலும் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா நேர்ந்ததாகவும், இதன் காரணமாகவே போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவேண்டிய நெருக்கடி ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.