பக்ரீத் பெருநாளையொட்டி இஸ்லாமியப் பெருமக்களுக்குத் தமிழக ஆளுநர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தியாகத் திருநாள் அனைவருக்கும் உடல்நலம் மற்றும் மகிழ்ச்சியை வழங்கட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் தியாகப் பெருநாளை மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் கொண்டாட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.