ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார் என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதற்கான திட்டத்தை நேற்று இரவு அவர் தனக்கு நெருங்கியவர்களிடம் அறிவித்துள்ளார்.
அதுமட்டுமின்ற, தற்போது அக்குரேகொட இராணுவத் தலைமையக முகாமில் உள்ள பதுங்குகுழியில் தங்கியுள்ள கோட்டாபய இன்று டுபாய் செல்லவுள்ளார்.
டுபாயில் இருந்து தனது பதவி விலகல் தொடர்பான அறிவிப்பை எதிர்வரும் 12ஆம் திகதி அறிவிக்கவுள்ளார் என தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தாகும்.