பனிலிங்கம் தரிசிக்க சென்ற பக்தர்கள் மழை நீரில் சென்ற துயரம்: 40 பேரை தேடும் பணி தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஸ்ரீநகர்:அமர்நாத் குகைக் கோவில் அருகே, மேக வெடிப்பு காரணமாக நேற்று மாலை பெய்த பலத்த மழையில் சிக்கி 16 பேர் பலியாகினர். 40 க்கும் மேற்பட்டோர் மாயமாகி விட்டதால் அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

latest tamil news

நூற்றுக்கும் மேற்பட்டோர் எல்லை பாதுகாப்பு படை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.

latest tamil news

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க, கடந்த 30ம் தேதி அமர்நாத் யாத்திரை துவங்கியது. இதுவரை 72 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக அமர்நாத் குகைக் கோவிலுக்கு செல்ல கடந்த வாரம் தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

latest tamil news

இதையடுத்து, மலையில் ஏறியிருந்த பக்தர்கள் ஆங்காங்கே ‘டென்ட்’களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில், நேற்று மாலை 5:30 மணிக்கு திடீரென பலத்த மழை கொட்டியது. மலைப்பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.அமர்நாத் குகைக்கோவிலுக்கு அருகே ஒரு பகுதியில் டென்ட்களில் தங்கியிருந்த பலர் இழுத்துச் செல்லப்பட்டனர்.இதுவரை 16 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காணாமல் போன 40க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. மோப்பநாய்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

latest tamil news

பிரதமர் மோடி விசாரிப்பு

இமயமலையில் நடந்த துயரசம்பவம் குறித்து பிரதமர் மோடி கேட்டு அறிந்து கொண்டார். மீட்பு பணியை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

அவசர அழைப்புக்கான தொலை பேசி எண்கள்:
9596779039, 9419051940

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.