பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு சர்வகட்சி அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்கத் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களுக்கு அறிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது. உலக உணவுத் திட்டத்தின் பணிப்பாளர் இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர் .சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிலைத்தன்மை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.இந்த விடயங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு அமைவாக தாம் இதனை ஏற்றுக்கொள்வதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.