திருவனந்தபுரம் :கேரளாவில் ‘பிளாக் பிரைடே’ தள்ளுபடி விற்பனையில் பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதிய காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இங்கு திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் உள்ள ‘லூலூ மால்’ நிறுவனம், 7ம் தேதியை பிளாக் பிரைடே நாளாக அறிவித்து, 50 சதவீத தள்ளுபடியில் மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட வீட்டு வசதிப் பொருட்களை விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்திருந்தது.
இதன்படி, 6ம் தேதி, இரவு 11:59 மணிக்கு துவங்கி அடுத்த நாள் வரை விற்பனை நடந்தது.
ஆயிரக்கணக்கானோர் தள்ளுபடியில் பொருட்கள் வாங்க நள்ளிரவிலும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
ஒரு கட்டத்தில் கடையில் பொருட்கள் காலியாகி விடுமே என்ற பதைபதைப்பில் ஆயிரக்கணக்கானோர் கடைக்குள் புகுந்தனர். அவர்களை சமாளிக்க முடியாமல் விற்பனையாளர்கள் திணறினர்.
‘இந்த அளவிற்கு பெருங்கூட்டம் வரும் என்பதை நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை’ என, லூலூ ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் ஆண்டுக்கு ஒருமுறை ‘பிளாக் பிரைடே’ என்ற பெயரில் 50 சதவீத தள்ளுபடியில் பொருட்கள் விற்கப்படும். அதை பின்பற்றி லூலூ மால் நிர்வாகம், இந்தியாவில் பிளாக் பிரைடே விற்பனையை நடத்தி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement