திருவண்ணாமலை மாவட்டம் தென்மாத்தூர் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ரிப்பன் வெட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை, மருத்துவத்தின் தந்தை என்று அழைக்க கூடிய ஹிப்போகிரேட்ஸ், உலகளாவிய பரிகாரத்தின் தெய்வம் பனாசியா ஆகிய மூன்று சிலைகளையும் திறந்து வைத்த முதலமைச்சர், 20 மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினியை வழங்கினார்.