தமிழ் சினிமாவில் வித்தியாசமான இயக்குநர்களின் பெயர்களின் பட்டியலை எடுத்துக்கொண்டால் அதில் நிச்சயமாக பார்த்திபனின் பெயர் இருக்கும். இதற்கு முக்கிய காரணம் சினிமாவில் அவர் செய்யும் வித்தியாசமான முயற்சிகளும், நடிப்பில் அவர் காட்டும் வித்தியாசமும்தான்.
90-களின் தொடக்கத்தில் புதிய பாதை என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பார்த்திபன், தொடர்ந்து பொண்டாட்டி தேவை, சுகமான சுமைகள், உள்ளே வெளியே, சரிகம பதனி. புள்ளக்குட்டிக்காரன், ஹவுஸ்புல், கதை திரைக்கதை வசனம் இயக்கம். உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
இதில் கடந்த 2019-ம் ஆண்டு பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதொடு மட்டுமல்லாமல் பார்த்திபனுக்கு தேசிய விருதை பெற்று தந்தது படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் பார்த்திபன் தற்போது மீண்டும் ஒரு வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளார்.
உலகிலேயே முதல்முறையான சிங்கிள் ஷாட்டில் நான் லீனியர் முறையில் இரவின் நிழல் என்ற படத்தை இயக்கியுள்ளார் இந்த படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது ஏ.ஆர்.ரஹமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் பார்த்திபனுடன் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக புதிய தலைமுறை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் பார்த்திபன் தனது முதல் படமான புதிய பாதை படத்தின் 2-ம் பாகம் எடுக்க உள்ளதாகவும். அதில் நடிகர் சிம்பு நாயகனாக நடிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் இந்த டிவி நிகழ்ச்சியில் பார்த்திபனிடம் 7 கேள்விகள் கேட்கப்பட்டது.
இதில் வித்தியசமான முயற்சி எடுத்து தோல்வியடைந்த படம் எது என்ற குடைக்குள் மழை என்று கூறியுள்ளார் அடுத்து உங்கள் தலைமுறை இயக்குநர்களில் இப்போது இருக்கும் இளம் இயக்குநர்களுடன் போட்டிபோடும் ஒரே இயக்குநர் நீங்கள் தான் உங்களின் சமகால இயக்குநர்கள் சறுக்கியது எங்கே என்று கேட்கப்பட்டது
இதற்கு பதில் அளித்த பார்த்தின் தன்னம்பிக்கை இழந்த தருணம் தான் அவர்கள் சறுக்கிய இடம். எனது உதவி இயக்குநர் எச்.வினோத் இப்போது அஜித் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார். அவருக்கு போட்டியாக ஒரு வித்தியாசமான படத்தை கொடுக்க நான் உழைத்து வருகிறேன். இது எங்களுக்குள் நடக்கும் ஆரோக்கியமான போட்டி என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பார்த்திபனின் முதல் படமான புதிய பாதை படத்தின் 2-ம் பாகம் எடுப்பது குறித்து கேட்டபோது. இதற்கான முடிவு நேற்று இரவே எடுத்தாச்சு. தயாரிப்பாளர் தானுவிடம் புதிய பாதை படத்தி்ன கதையை மாற்றி சொன்னேன். அவர் கதையை கேட்டுவிட்டு நன்றாக இருக்கிறது இதை சிம்பு செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் சிம்பு முதல்முறையாக பார்த்திபன் இயக்கத்தில் நடிக்க உள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கூட்டணி இணையும் பட்சத்தில் பார்த்திபன் இயக்கத்தில் பெரிய நடிகர் ஒருவர் நடிப்பது இதுவே முதல்முறையாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“