பெர்சனல் லோன் வாங்க போறீங்களா? ஒரு நிமிஷம் இதை படிங்க!

பெர்சனல் லோன் என்று கூறப்படும் தனி நபர் கடன் தற்போது வங்கிகளில் மிக எளிதாக கிடைக்கிறது.

ஆனால் அந்த கடனை வாங்குவதற்கு முன் சில அடிப்படை விதிகளை தெரிந்து கொள்ளாவிட்டால் பெரும் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

எனவே தனிநபர் கடன் வாங்க முடிவு செய்தவர்கள் தயவுசெய்து கீழ்கண்ட விதிமுறைகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தனிநபர் கடன்

மருத்துவ அவசர நிலை. உயர் கல்வி. வெளிநாட்டு பயணம். திருமண செலவு உள்ளிட்ட பல நிதி தேவைகளுக்காக தனிநபர் கடனை பெறுவதில் எந்த வித தவறும் இல்லை. ஆனால் ஆடம்பர பொருட்களை வாங்கவும், கார், டூ வீலர் வாங்கவும் தனிநபர் கடன் வாங்கினால் அதனை சரியான முறையில் திரும்ப செலுத்தாவிட்டால் பெரும் சிக்கல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

எளிதில் கிடைக்கும்

எளிதில் கிடைக்கும்

தனிநபர் கடன் பெறுவது தற்போது மிகவும் எளிதாக உள்ளது. பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் எந்தவித பாதுகாப்பு இன்றி. ஆவணங்கள் இன்றி தற்போது தனிநபர் கடன்களை தந்து கொண்டிருக்கின்றன. எந்தவித பிணையமும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எளிமையாக சொல்வதென்றால் கடன் வாங்குபவர்கள் சில விதிமுறைகளை மட்டும் ஒப்புக்கொண்டால் உடனடியாக தனிநபர் கடன் கிடைக்கும்.

 முக்கிய விஷயங்கள்
 

முக்கிய விஷயங்கள்

ஆனால் அதே நேரத்தில் மற்ற கடன் வட்டி விகிதங்களுடன் ஒப்பிடும்போது தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் அதிகமாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே தனிநபர் கடன் வாங்குவதற்கு முன்னர் ஒரு சில முக்கிய விஷயங்களை தெரிந்துகொள்ளவேண்டும்.

 தகுதி

தகுதி

தனிநபர் கடன் வாங்குவதற்கான தகுதி என்ன என்பது வங்கிக்கு வங்கி மாறுபடும். பொதுவாக நிரந்தர வருமானம் உள்ளவர்கள். விண்ணப்பதாரரின் வயது மற்றும் சிபில் ஸ்கோர் ஆகியவை முக்கிய காரணங்களாக தனிநபர் கடன் வழங்குபவர்கள் கணக்கிடுவார்கள்.

சிபில் ஸ்கோர்

சிபில் ஸ்கோர்

சிபில் மதிப்பெண் என்பது மூன்று இலக்க எண்ணிக்கையில் உள்ள ஒரு நபரின் கடன் வரலாற்றின் சுருக்கம் ஆகும். இது 300 முதல் 900 புள்ளிகள் வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக கிரெடிட் ஸ்கோர் இருந்தால் மட்டுமே தனிநபர் கடன் விண்ணப்பம் ஏற்றுகொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் பல்வேறு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களைச் சரிபார்ப்பது நல்லது. வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடலாம். கூடுதலான வட்டிக்கு தனிப்பட்ட கடன்களை வழங்கும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் உள்ளன. தனிநபர் கடன் வழங்கும் வங்கிகள் வழக்கமாக ஆண்டுக்கு 10.50 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வசூலிக்கின்றன.

எளிதாக விண்ணப்பிக்கலாம்

எளிதாக விண்ணப்பிக்கலாம்

தனிநபர் கடனை ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் எளிதாகப் விண்ணப்பிக்கலாம். மேலும், தனிநபர் கடன் வாங்குபவர் ஒரு வங்கியின் தற்போதைய வாடிக்கையாளராக இருந்தால் அவருக்கு தனிநபர் கடன் கிடைப்பது மிகவும் எளிது. அதுமட்டுமின்றி தங்களுடைய வங்கி பரிவர்த்தனைகளை சுட்டிக்காட்டி குறைந்த வட்டி விகிதத்தை கோரி வங்கி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம்.

 முன்கூட்டியே செலுத்த போகிறீர்களா?

முன்கூட்டியே செலுத்த போகிறீர்களா?

தனி நபர் கடன் வழங்கும் வங்கிகளிடம் கடன் வாங்குபவர், ஒப்புக்கொள்ளப்பட்ட காலவரையறை முடிவதற்குள் தனிநபர் கடனை முன்கூட்டியே முடிக்க விரும்பினால், சில வங்கிகள், தனியார் நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன. எனவே வங்கியில் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன், வாங்கிய தனிநபர் கடனை முன்கூட்டியே செலுத்தினால் கூடுதல் கட்டணங்களை எவ்வளவு என்பது பற்றி அறிந்திருக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Want To Apply For A Personal Loan? This five points will help you!

Want To Apply For A Personal Loan? This five points will help you! | பெர்சனல் லோன் வாங்க போறீங்களா? ஒரு நிமிஷம் இதை படிங்க!

Story first published: Saturday, July 9, 2022, 9:22 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.