பொன்னியின் செல்வனா? பாகுபலியா? தமிழ் தெலுங்கு ரசிகர்களிடையே மூண்ட மோதல்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் நேற்று மாலை வெளியானதை தொடர்ந்து இந்த படத்தை தெலுங்கில் வெளியான பாகுபலி படத்துடன் ஒப்பிட்டு தெலுங்கு ரசிகர்கள் கேலி செய்ய தொடங்கியுள்ள நிலையில் இதற்கு தமிழ் ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர் .

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தை படமாக எம்.ஜி.ஆர் உட்பட பலரும் முயற்சி செய்தனர். ஆனால் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிநத நிலையில், தற்போது இதை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். ஏற்கனவே ஒருமுறை முயற்சித்து தோல்வியடைந்த மனிரத்னம் தற்போது 2-வது முயற்சியில் படக்கியுள்ளார்.

மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமாக தயாராகியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மணிரத்னம் தயாரித்துள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, பிரபு பிரகாஷ்ராஜ் பார்த்திபன் சரத்குமார், த்ரிஷா ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சுமார் 1500 கோடி செலவில் 2 பாகங்களாக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ந் தேதி தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து படத்தின் டீசர் நேற்று பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தை ஏற்கனவே தெலுங்கில் வெளியான பாகுபலி படத்துடன் ஒப்பிட்டு தெலுங்கு ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர். ராஜமௌலி இயக்கத்தில் 2 பாகங்களாக வெளியான பாகுபலி திரைப்படம் பெரிய வசூல் சாதனை செய்தது. மேலும் தெலுங்கில் வெளியான முதல் பிரம்மாண்ட திரைப்படம்என்ற அந்தஸ்தையும் பெற்றது.

பாகுபலி படத்தை தொடர்ந்து, அல்லு அர்ஸீன் நடிப்பில் புஷ்பா, ராம்சரன் என்டிஆர் நடிப்பில் ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்கள் வெளியாகின. இந்த படங்கள் இந்திய அளவில் வசூல் சாதனை செய்த நிலையில், இந்திய அளவில் வெளியாகும் அளவுக்கு தமிழில் படங்கள் இல்லை என்று அப்போது பரவலாக பேசப்பட்டது.

இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் 3-ந் தேதி வெளியான விக்ரம் படம் பாகுபலி, புஷ்பா ஆர்ஆர்ஆர் படங்களில் வசூலை தவிடுபொடியாக்கியது. இந்நிலையில், தமிழ் சினிமாவின் அடுத்த பிரம்மாண்டமாக தற்போது பொன்னியின் செல்வன் உருவாகியுள்ளது.

இந்த படம் இந்திய அளவில் பெரும் வசூல் சாதனை நிகழ்த்தும் என்று பரவரலாக பேசப்பட்டு வரும் நிலையில், பாகுபலி படத்துடன் ஒப்பிட்டு பொன்னியின் செல்வன் படத்தை தெலுங்கு ரசிகர்கள் கேலி செய்து வரும் நிலையில், தமிழ் ரசிகர்கள் அதற்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதில் ஒரு ரசிகர் அன்பான கோலிவுட் ரசிகர்களே, தமிழ்ப் பாசத்திற்குக் காரணமான அனைத்தையும் கண்மூடித்தனமாக ஆதரிக்காதீர்கள், இது, ஏறக்குறைய 8 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பாகுபலி 1 டீசர், பொன்னியின் செல்வனின்  பட்ஜெட்டில் பாதி கூட இல்லை என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு தெலுங்கு ரசிகர், இன்னும் 100 அல்லது 1000 வருடங்கள் ஆகட்டும், பாகுபலி போல ஒரு படத்தை எடுக்க முடியாது , அதன் சாராம்சத்தை கூட தொட முடியாது. ராஜமௌலி உங்கள் படைப்புக்கு நாங்கள் தலைவணங்குவோம் என்று கூறியுள்ளார்.

மற்றொரு தமிழ் ரசிகர் பாகுபலியில் வரும் முதல் காட்சியை பதிவிட்டு இந்தக் காட்சி முற்றிலும் பொன்னியின்செல்வனிடம் இருந்து எடுக்கப்பட்டது… பொன்னியின்செல்வன் 1950-ல் கல்கியால் எழுதப்பட்ட அதே காட்சி பாகுபலியில் காட்டப்பட்டது. “மந்தாகினி ராஜ ராஜ சோழனை காவிரியிலிருந்து காப்பாற்றும் காட்சி என்று கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.