'பொன்னியின் செல்வன்' – காதலியாக நடிப்பது யார் தெரியுமா ?
கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' சரித்திர நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகத்தின் டீசர் நேற்று வெளியானது. டீசருக்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பு கொடுத்துள்ளனர்.
மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பவர்களை சில வினாடிகள் காட்டி, துணை கதாபாத்திரங்களில் நடிப்பவர்களை ஒரு பிரேமில் மட்டுமே டீசரில் காட்டியிருக்கிறார்கள். மற்ற கதாபாத்திரங்களில் நடிப்பவர்களின் தோற்றம் எப்படியிருக்கிறது என்பதை டீசரின் வேகத்தைக் குறைத்தே பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
அப்படி தேடிப் பார்த்த பின்புதான் 'பொன்னியின் செல்வன்' ஆக நடிக்கும் ஜெயம் ரவியின் காதலியாக யார் நடிக்கிறார்கள் என்பதை சற்றே தெரிந்து கொள்ள முடிந்தது. சோழப் பேரரசின் சேனாதிபதியாக இருந்த கொடும்பாளூர் பெரிய வேளார் பூதி விக்கிரம கேசரியின் மகளான வானதி தான் பொன்னியின் செல்வன் அருள் மொழி வர்மனின் காதலி.
அந்த வானதி கதாபாத்திரத்தில் புதுமுகம் சோபிட்டா துலிபலா நடித்திருக்கிறார். இவர் 2013ம் ஆண்டு பெமினா மிஸ் இந்தியா எர்த் பட்டம் வென்றவர். ஹிந்தி, தெலுங்கு, மலையாளத்தில் நடித்திருக்கிறார். தமிழில் அறிமுகமாகும் படம் இது. பொன்னியின் செல்வனில் சோபிட்டா ஏற்று நடித்திருக்கும் வானதி கதாபாத்திரம் ஒரு சுவாரசியமான கதாபாத்திரம்.
இந்த சோபிட்டா துலிபலா தான் சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யாவின் தற்போதைய காதலி என கடந்த சில வாரங்களாக தெலுங்கு மீடியாக்களில் கிசுகிசு எழுந்தது.