பொறியியல் கல்லூரிகள் ரேங்கிங்: அண்ணா பல்கலை. செய்தது சரியா?

TNEA counselling: Impacts of Anna University Engineering colleges rank list: பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள நிலையில், இப்படி தரவரிசை வெளியிடுவது சரியா? இது மாணவர்களிடையே என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? கல்லூரிகளுக்கு சாதகமா? பாதகமா? என்பது போன்ற விஷயங்களை இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இதற்கான விண்ணப்பச் செயல்முறை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அண்ணா பல்கலைக்கழகம் அதன் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. பின்னர் சில மணி நேரங்களுக்குப் பிறகு, சில திருத்தங்களுடன், பொறியியல் கல்லூரிகளின் முன்னுரிமை பட்டியல் என்ற பெயரில் தரவரிசை வெளியிடப்பட்டது.

இந்த தரவரிசையானது, கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் பொதுப் பிரிவினரின் கடந்த 5 ஆண்டுகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களை சராசரி செய்யப்பட்டதன் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வியாளர் ரமேஷ்பிரபா தனது யூடியூப் பக்கத்தில் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: தமிழகத்தின் ‘டாப்’ பொறியியல் கல்லூரிகள் எவை? அண்ணா பல்கலை. அதிகாரபூர்வ பட்டியல்

மேலும், இவ்வாறு ஒரே ஒரு பாடப்பிரிவை மட்டும் தரவரிசைக்கு எடுத்துக்கொள்வது ஏற்புடையதா? கம்ப்யூட்டர் சயின்ஸ் இல்லாத கல்லூரிகளுக்கு இந்த அணுகுமுறை சரியா? பொதுப்பிரிவினருக்கான கட் ஆஃப் மதிப்பெண்களை மட்டும் வைத்து தரவரிசைப்படுத்த முடியுமா? கொரோனா சூழல் இருக்கும் நிலையில், கடந்த 5 ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண்களை சராசரிப்படுத்துவது சரியா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தரவரிசையில் முன்னிலையில் உள்ள கல்லூரிகளுக்கு இது சாதகமா இருக்கும் நிலையில், தரவரிசையில் பின் தங்கிய கல்லூரிகளின் சேர்க்கையை இது கடுமையாக பாதிக்கும் என சம்பந்தப்பட்ட கல்லூரிகள் கருதுகின்றன.

அதேநேரம் தரவரிசை வெளியிட்டில் உள்ள குழப்பம் ஏற்புடையதல்ல. அண்ணா பல்கலைக்கழகம் அதனை கவனமுடன் கையாண்டிருக்கும் வேண்டும். ஒரு பாடப்பிரிவுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது, ஒரே ஒரு பாடப்பிரிவை மட்டும் வைத்து தரவரிசை வெளியிடுவது போன்றவை சரியான அணுகுமுறை அல்ல, எனக் கூறும் கல்வியாளர் ரமேஷ்பிரபா, கடந்த ஆண்டுகளில், கல்லூரிகளின் தேர்ச்சி விகித அடிப்படையில், கல்லூரிகளுக்கான தரவரிசை இருந்தது. இந்த அணுகுமுறையே சரியானதாக இல்லாத நிலையில், தற்போதைய முறையும் சரியானது அல்ல, என்று கூறியுள்ளார்.

மேலும், டாப் மோஸ்ட் விருப்ப பாடப்பிரிவாக, கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ள நிலையில், அதன் அடிப்படையில், மாணவர்களுக்கு தகவல் அளிக்கும் விதமாக இந்த கல்லூரிகளின் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தரப்பில் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.