உக்ரைன் போரின் இடையேயும் ரஷ்யா அதிக அளவில் கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்து லாபம் ஈட்டி வருவதால், சவுதி அரேபியா கச்சா எண்ணெய் விலையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கத்திய நாடுகளின் தடை காரணமாக ரஷ்யா சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அதிகரித்துள்ளது. சவுதி அரேபியாவை பின்னுக்கு தள்ளி, இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் 2-வது நாடு என்ற நிலையையும் எட்டியது.
இதனால் அதன் வருமானம் 100 நாட்களில் 98 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது. அதேநேரத்தில் ஒபெக் (OPEC) எனப்படும் வளைகுடா பகுதியைச் சேர்ந்த எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் வருமானம் வெகுவாக குறைந்தது.
இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலையை ஈரான் குறைத்தது போல் சவுதி அரேபியா உள்ளிட்ட பிற நாடுகளும் விரைவில் குறைக்கும் எனத் தெரிகிறது.