ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக ஒற்றை தலைமையை வலியுறுத்திய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் எம் ஏ முனுசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் தரப்பினரும் கலந்து கொண்டனர்.
அப்போது எடப்பாடி பழனிசாமியை ஒற்றை தலைமையாக கொண்டுவர தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறியதை எடுத்து, ஓபிஎஸ் தரப்பினர் ரகளையில் ஈடுபட்டு, கட்சி நிர்வாகிகள் அமர போடப்பட்டிருந்த நாற்காலிகளை தூக்கி வீசினர். இதையடுத்து, ஓபிஎஸ்-இபிஎஸ் ஆய்வாளர்கள் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவருக்கு ஒருவர் நாற்காலிகளால் தாங்கிக் கொண்டனர். ஆலோசனை கூட்டம் கலவரம் போல் காட்சியளித்தது.
இதையடுத்து, காவல்துறையினர் வந்து கூட்டத்தை கலைத்தனர். அதில் இபிஎஸ் தரப்பை சார்ந்த மூன்று பேர் மண்டை உடைக்கப்பட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் அதிமுகவின் ஒற்றை தலைமை வலியுறுத்திய ஆலோசனை கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
இதில எடப்பாடி பழனிசாமியை ஒற்றை தலைமையாக கொண்டுவர தீர்மானம் நிறைவேற்றி உள்ளதோடு, அதிமுக ஒற்றை தலைமை வலியுறுத்தி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னுடைய ஆதரவாளர்களை அனுப்பி கூட்டத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் நடந்து கொண்டதாகவும், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதிவில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றி தலைமை கழக நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.