மஹாராஷ்டிராவில் கொட்டுது மழை| Dinamalar

மும்பை:மஹாராஷ்டிராவின் மூன்று மாவட்டங்களில் கனமழை காரணமாக 128 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
கடந்த வாரம் மஹாராஷ்டிராவின் மும்பை மற்றும் தானே நகரங்களில் கனமழை கொட்டி அவை வெள்ளத்தில் மிதந்தன. கடந்த இரண்டு நாட்களாக கட்சிரோலி, ஹிங்கோலி மற்றும் நான்டெட் மாவட்டங்களில் கனமழை கொட்டுகிறது. இங்குள்ள 128 கிராமங்களையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
ஹங்கோலியில் நேற்று காலை 8:௦0 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 1௫.செ.மீ., மழை கொட்டித் தீர்த்துள்ளது. வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுகின்றனர்.கனமழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மும்பை – கோவா தேசிய நெடுஞ்சாலை மற்றும் எடப்பள்ளி – பாமரகாட் மாநில நெடுஞ்சாலை ஆகியவை மூடப்பட்டுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.