யாஷிகாவிடம் மேடையிலேயே ஜொள்ளுவிட்ட கூல் சுரேஷ்
தமிழ் திரையுலகின் கவர்ச்சி நடிகையான யாஷிகா ஆனந்த் சினிமாவில் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். அசோக் குமார் நடிப்பில் வெளியாகவுள்ள பெஸ்டி திரைப்படத்தில் யாஷிகா ஆனந்த் ஹீரோயினாக நடித்துள்ளார். அந்த படத்தின் புரோமோஷன் விழாவில் ஹீரோ அசோக் குமார், ஹீரோயின் யாஷிகாவுடன் படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். சமீபகாலமாக படத்திற்கு ரிவியூ சொல்கிறேன் என்கிற பெயரில் வாய்க்கு வந்ததை உளறி காமெடி செய்து டிரெண்டாகி வரும் நடிகர் கூல் சுரேஷூம் அந்த விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், 'வெந்து தணிந்தது காடு, யாஷிகா ஆனந்துக்கு வணக்கத்தை போடு' என தனது ஸ்டைலில் பஞ்ச் டயலாக்கை எடுத்துவிட்டார். தொடர்ந்து பேசிய கூல், சுரேஷ், 'படத்தின் டிரைலரை சமீபத்தில் பார்த்தேன். அதுவே வயாகரா சாப்பிட்டது போல் இருக்கிறது. இந்த படத்தை முதல்நாளே பார்க்க வேண்டும். இளைஞர்கள் கண்டிப்பாக வர வேண்டும்' என கூறியுள்ளார். பேட்டியின் போது யாஷிகாவின் கைகளை பிடித்து தடவிய படி அவர் ஜொள்ளுவிட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்த்து பலரும் கூல் சுரேஷை ஏடாகூடமாக கலாய்த்து தள்ளி வருகின்றனர்.