இந்திய முதலீட்டு சந்தை அதிகப்படியான மாற்றங்களையும், சரிவுகளையும் சந்தித்து வரும் நிலையில் பல முதலீட்டாளர்களுக்குக் குறிப்பாக ரீடைல் முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பான முதலீடுகள் அதிகளவில் தேவைப்படுகிறது.
இந்த வகையில் இந்தியர்கள் எப்போதும் பாரம்பரியமாக நம்பும் ரியல் எஸ்டேட் துறையில் 2022 ஆம் ஆண்டின் முதல் 6 மாதத்தில் மிகப்பெரிய அளவிலான முதலீட்டை பெற்றுள்ளது.
நைசா நழுவும் சோமேட்டோ.. எங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்ல பாஸ்..!
ரியல் எஸ்டேட் துறை
இந்திய ரியல் எஸ்டேட் துறையில், நிறுவன முதலீடுகள் அதாவது Institutional investments 2022 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் மட்டும் சுமார் 2.6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இது 2021 ஆம் ஆண்டு முதல் அரையாண்டைக் காட்டிலும் 14 சதவீதம் அதிகமாகும். கோவிட்-19 தொற்று பாதிப்புக்குப் பின்பு, இந்திய ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து வருகிறது.
ரஷ்யா – உக்ரைன் போர்
குறிப்பாக ரஷ்யா – உக்ரைன் போருக்கு பின்பு அமெரிக்கா பிரிட்டன் நாடுகள் வட்டி விகிதத்தை உயர்த்தியதால் பங்குச்சந்தை முதலீடுகள் அதிகப்படியான தடுமாற்றங்களை எதிர்கொண்டது. இதன் மூலம் பல முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யத் துவங்கினர்.
அலுவலகத் துறை
2022 ஆம் ஆண்டு முதல் அரையாண்டில் அலுவலகத் துறையால் ஊந்தப்பட்டு இந்திய ரியல் எஸ்டேட் துறையில் அதிகப்படியான முதலீடுகள் குவிய துவங்கியது. அலுவலகத் துறை மட்டுமே சுமார் 48 சதவீத பங்கைக் கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து சில்லறை விற்பனைத் துறை 19 சதவீத பங்கைக் கொண்டுள்ளது.
காலாண்டு வளர்ச்சி
காலாண்டு அடிப்படையில், Q2 2022க்கான வரவுகள் முந்தைய காலாண்டில் இருந்து அதிகரித்துள்ளன, அதே நேரத்தில் 2021 இன் சராசரி காலாண்டு வரவுகளில் இருந்து 50% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
அதிகப் பயன்
இந்தியாவில் மேம்பாடு மற்றும் செயல்பாட்டுச் சொத்துக்களில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தற்போதைய வணிகச் சூழலுடன், அதிகரித்த மூலதன வரவால் ஆசியப் பொருளாதாரங்களிலிருந்து இந்தியா அதிகப் பயனடையும்.
ஈக்விட்டி மற்றும் கடன்
தற்போதுள்ள மற்றும் புதிய முதலீட்டு மேலாண்மை தளங்களால் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் ஈக்விட்டி மற்றும் கடன் வரவு இரண்டையும் காண வாய்ப்புள்ளது என்று கோலியர்ஸ் இந்தியாவின் கேபிடல் மார்க்கெட்ஸ் & இன்வெஸ்ட்மென்ட் சர்வீசஸ் நிர்வாக இயக்குனர் பியூஷ் குப்தா கூறினார்.
உள்நாட்டு முதலீட்டாளர்கள்
இதேவேளையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் 2022 ஆம் ஆண்டின் அரையாண்டில் 38% பங்குடனும் கடந்த ஆண்டை காட்டிலும் 13% அதிகரித்துள்ள, மீண்டும் ஆதிக்க நிலைக்கு வந்துள்ளனர். இதன் மூலம் இந்திய ரியல் எஸ்டேட் துறை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் நம்ம பருப்பு வேகாது.. வெளியேறும் கிரிப்டோ வியாபாரிகள்..!
Investment in Indian realty up 14 percent at 2.6 billion in just 6 months of 2022
Investment in Indian realty up 14 percent at 2.6 billion in just 6 months of 2022 ரியல் எஸ்டேட் துறையில் குவியும் முதலீடுகள்.. இதுதான் ஸ்மார்ட் ஐடியாவா..?