50 ரூபாய் என தினக்கூலியில் தனது வாழ்க்கையை தொடங்கிய ஒருவர் தற்போது 1200 கோடிக்கு அதிபதி ஆகி இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விடாமுயற்சி. அதிர்ஷ்டம். அயராத உழைப்பு, தொழிலில் நேர்மை ஆகியவை இருந்தால் வாழ்கையின் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் மேல் மட்டத்திற்கு வந்து விடுவார்கள் என்பது தெரிந்ததே.
ஏர்டெல் வாடிக்கையாளரா நீங்க.. சாமானியர்களுக்கு ஏற்ற 3 புதிய பிளான்கள்..!
அந்த வகையில் தொழிலதிபர் அருண் சாமுவேல் தினக்கூலியாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி தற்போது இந்தியாவின் மாபெரும் தொழில் அதிபராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.50க்கு தினக்கூலி
பிரபல தொழிலதிபர் அருண் சாமுவேல் தனது 17வது வயதில் வீட்டுக்கு வீடு விற்பனை செய்யும் விற்பனையாளர் வேலையில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். 1984ஆம் ஆண்டு ரூ. 50 தினசரி ஊதியத்திற்கு, அவர் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை விற்றார். இன்று, 8500 பணியாளர்களை கொண்ட ரூ. 1224 கோடி விற்றுமுதல் வணிகக் குழுமத்தை அவர் வைத்திருக்கிறார்.
விங்ஸ் குரூப் ஆஃப் கம்பெனி
55 வயதான பெங்களூருவைச் சேர்ந்த அருண், விங்ஸ் குரூப் ஆஃப் கம்பெனிகளின் தலைவர் மற்றும் எம்.டி.யாக உள்ளார். இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள சிறந்த பிராண்டுகளுக்கான சந்தைப்படுத்தல், வர்த்தகம் மற்றும் விளம்பரத் தீர்வுகளை வழங்குகிறது.
344 வாடிக்கையாளர்கள்
“நாங்கள் இந்தியா முழுவதும் 344 வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளோம் என்றும், மேலும் இந்தியாவில் உள்ள 67% ஐடி நிறுவனங்களில் பணிபுரிகிறோம் என்றும் அருண் கூறியதாக முன்னணி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
3 ஊழியர்களுடன் தொடக்கம்
விங்ஸ் பிராண்ட் ஆக்டிவேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரது வணிகம் 28 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் மூன்று ஊழியர்களுடன் தொடங்கப்பட்டது. இன்று, இந்நிறுவனம் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் மட்டுமின்றி 8 நாடுகளிலும் அலுவலகங்களை கொண்டுள்ளது.
விற்பனை பணியாளர்கள்
விங்ஸ் பிராண்ட் ஆக்டிவேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் விற்பனை பணியாளர்கள், டெலிகாலர்களை வழங்குகிறது. மேலும் மனிதவள ஆட்சேர்ப்பு, பணியாளர்களுக்கான பயிற்சி மற்றும் ஊதிய மேலாண்மை ஆகியவற்றிலும் சேவைகளை வழங்குகிறது. டிஜிட்டல் மீடியா மார்க்கெட்டிங், உள்கட்டமைப்பு, வசதி மேலாண்மை மற்றும் ஆலோசனை ஆகியவற்றிலும் இவர்களுடைய ஊழியர்கள் உள்ளனர்.
கனவு
1993 ஆம் ஆண்டில் அருண் சாமுவேல் ஒரு கனவு கண்டதாக குறிப்பிட்டுள்ளார். அந்த கனவில் நான் ஒரு குன்றின் உச்சியில் நின்று கொண்டிருந்தேன். அங்கிருந்து குதி – நீ விழமாட்டாய், ஆனால் பறப்பாய்’ என்ற குரல் கேட்டது. ஒரு பெரிய கழுகு சுதந்திரமாக பறப்பதைக் கண்டேன். அடுத்த நாள் காலை, நான் எனது சொந்த தொழிலைத் தொடங்க முடிவு செய்தேன். அதற்கு விங்ஸ் என்று பெயரிட்டு, நிறுவனத்தின் லோகோவாக கழுகைத் தேர்வு செய்தேன்’ என்று அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதன்பின் 1994 ஆம் ஆண்டு அருண் விங்ஸ் பிராண்ட் ஆக்டிவேஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.
முதல் வாடிக்கையாளர்
புதிய தொழில்முனைவோருக்கு சில விஷயங்கள் எளிதானது அல்ல. ஆனால் அவருக்கு பெரிய கனவுகள் மற்றும் கடின உழைப்பு இருந்ததால் எல்லாமே எளிதாக இருந்தது. என்னுடைய முதல் வாடிக்கையாளர், கூர்க் காபியை இன்னும் நான் நினைவில் வைத்திருக்கிறேன் என்றும், அதைத் தொடர்ந்து கிசான், ஜில்லட், ஆஷிர்வாத், இன்டெல், ஹனிவெல், பிளிப்கார்ட், மேக்ஸ், கோகோ-கோலா, ஆதித்யா பிர்லா மற்றும் ஏர்டெல் ஆகியவை எங்களுடைய வாடிக்கையாளர்கள் என அருண் பெருமையுடன் கூறியுள்ளார்.
அறிவுரை
அருண் சாமுவேல் தொடர்ந்து மார்க்கெட்டிங், விளம்பரம் மற்றும் பிராண்டிங் தொழில்களில் அயராது உழைத்து வருகிறார். இளம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கு அவர் அளித்த அறிவுரை என்னவெனில், ‘கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தினால், நீங்கள் இன்னும் மேலே செல்லலாம்’ என்பதுதான்.
From Rs 50 daily wage to Rs. 1224 Crore Businessman.. The Success Of Arun Samuel!
From Rs 50 daily wage to Rs. 1200 Crore Businessman.. The Story Of Arun Samuel! | 50 ரூபாய் தினக்கூலியில் ஆரம்பித்து ரூ.1224 கோடிக்கு அதிபரான அருண் சாமுவேல்: ஒரு வெற்றிக்கதை