சென்னை: 100 அடி சாலையில் வடபழனி சந்திப்பில் இருந்து அசோக் பில்லர் வரை இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. 100 அடி சாலை 2-வது நிழற்சாலை சந்திப்பில் இருந்து 4-வது நிழற்சாலை சந்திப்பு வரை ஒருவழிபாதையாக மாற்றப்பட்டது. அசோக் பில்லர் வழியா வடபழனி, கோயம்பேடு, கே.கே.நகர் செல்லும் வாகனங்கள் வழக்கம்போல செல்லலாம் என தெரிவிக்கப்பட்டது.