வயசானால் லவ் பண்ண கூடாது… அப்படி சட்டம் இருக்கு… கோபி வெளியிட்ட வீடியோ

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வயதாகிவிட்டால் லவ் பண்ணக்கூடாது இது சட்டம் என்று கோபி கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சதீஷ் பேசியுள் வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.

திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்தால என்னென்ன நடக்கும் என்பதையும் ஒரு குடும்ப தலைவி தன் வாழக்கையில் சந்திக்கும் பிரச்சினைகளையும் மையப்படுத்தி ஒளிபரப்பாகி வரும சீரியல் பாக்கியலட்சுமி.

கோபி பாக்யா தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் கோபி பாக்யாவின் நெருங்கிய தோழியும் தனது முன்னாள் காதலியுமான ராதிகாவுடன் திருமணத்திற்கு தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறார். இந்த விஷயங்களை எதுவும் தெரியாத பாக்யா கணவர் சொல்வதை எல்லாம் கேட்டு நடந்துகொள்கிறார்.

இதில் கடந்த வார தொடக்கத்தில் கோபி விபத்தில் சிக்கி ஹாஷ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டபோது மனைவி என்று சொல்லி ராதிகா  செய்த அனைத்தையும் பாக்யா கண்டுபிடித்துவிட்டார். இப்போது வீட்டிற்கு வந்துள்ள கோபியிடம் பாக்யா கேள்வி மேல் கேள்வியாக அடுக்கி வருகிறார்.

இதற்கு என்ன பதில் சொல்வது என்று கோபி விழித்துக் கொண்டிருக்கிறார் இதனிடையே கோபி அப்படியெல்லம் ஒன்றும் செய்திருக்க மாட்டான் என்று அவரது அம்மா ஈஸ்வரி ஸ்ராங்கான சொல்ல, கோபி பழக்குவது ராதிகாவுடன் தான் என்று பாக்யா இன் உண்மையை உடைக்க இருக்கிறார்.

இதனால் குடும்பத்தினர் ஷாக் ஆக அடுத்து என்ன நடக்கும் என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், கோபியாக நடித்து வரும் நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், “இன்னும் ஒரு வாரத்திற்கு கூண்டில் குற்றவாளியாக கோபி நிற்கப்போகிறார். தண்டனைக்கு தயாராகி கொண்டிருக்கிறேன். பாவம் கோபி..

காதலுக்காக அவர் செய்த பித்தலாட்டங்கள் நிறைய.. அனுபவிச்சி தான் ஆகணும்.””வயசானால் லவ் பண்ண கூடாது இல்லீங்களா.. அப்படி எல்லாம் சட்டம் இருக்கு.. என்ன பண்றது” என பேசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.