ராய்ச்சூர் : வாகன சோதனையின் போது வாகனங்களை பறிமுதல் செய்யும் போலீசார், அதற்கு காப்பீடு செய்த பின்னர் திருப்பி உரியவரிடம் ஒப்படைக்கின்றனர்.ராய்ச்சூர் மாவட்டம் முழுவதும் ஒரு வாரமாக போக்குவரத்து போலீசார், இரு சக்கர வாகன சோதனையில் ஈடுபட்டு ஆவணங்களை பரிசீலனை செய்கின்றனர்.
அதில், காப்பீடு இல்லாத அனைத்து வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உடனடியாக அதே இடத்தில் காப்பீடு செய்து கொள்வோருக்கு வாகனம் திருப்பி தரப்படுகிறது.மற்ற வாகனங்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு செல்கின்றனர். அங்கு காப்பீடு செய்த பின், மீண்டும் உரியவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதற்கு வாகன ஓட்டிகள் இடையே ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.இது குறித்து மாவட்ட போலீஸ் எஸ்.பி., நிகில் கூறுகையில், “ஒரு வாரமாக வாகனங்களுக்கு அபராதம் விதிக்காமல் வெறும் காப்பீடு மட்டுமே செய்து கொண்டு திருப்பி அளிக்கப்படுகிறது. ”இனி வாகனங்களுக்கு அபராதத்துடன் காப்பீடு செய்யப்படும். எனவே வாகன ஓட்டிகள் தங்களது நன்மைக்காக காப்பீடு செய்து கொள்வது அவசியம்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement