விராத் கோலி-க்கு வந்த பிரச்சனையை பாத்தீங்களா.. பாவம் மனுஷன்..!

இந்தியாவில் ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்யும் சீன நிறுவனங்கள் அடுத்தடுத்து அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறையிடம் மாட்டி வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோலி-க்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

விராத் கோலி கிரிக்கெட் மட்டும் அல்லாமல் 20க்கும் அதிகமான பிராண்டுகளுக்குப் பிராண்ட் அம்பாசிட்டராக விளங்குறார். இந்நிலையில் விராத் கோலி பிராண்ட் அம்பாசிட்டராகத் தற்போது பண மோசடி, பணச் சலவையில் மாட்டிக்கொண்டு இருக்கும் விவோ நிறுவனமும் ஒன்று.

1 இல்ல, 2 இல்ல மொத்தம் 3.. ராஜ வாழ்க்கை வாழும் முகேஷ் அம்பானி..!

Vivo நிறுவனம்

Vivo நிறுவனம்

சீன மொபைல் போன் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான விவோ பண மோசடி, பணச் சலவை பிரச்சனைகள் முழுமையாக முடிக்கும் வரையில் Vivo Mobiles-ன் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக தளங்களில் பிராண்ட் அம்பாசிடர் விராட் கோலி இடம்பெறும் விளம்பரங்களை ஒளிபரப்புவதைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

விராத் கோலி

விராத் கோலி

விராத் கோலி அதிகம் சம்பாதிக்கும் பிரிவில் விளம்பரம் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், விவோ விளம்பரங்கள் ஓளிப்பரப்புச் செய்யத் தடை செய்துள்ளது பெரும் பாதிப்பாகப் பார்க்கப்படுகிறது. மேலும் விவோ பண மோசடி, பணச் சலவை பிரச்சனைகள் முதல் போலி ஆவணங்களைக் கொண்டு சீன அதிகாரிகளைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டது முதல் பலவற்றின் விசாரணையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

62,476 கோடி ரூபாய்
 

62,476 கோடி ரூபாய்

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான விவோ-வின் இந்தியப் பிரிவு அதன் மொத்த விற்றுமுதல் அதாவது Turnover-ல் கிட்டத்தட்ட 50 சதவீத பணத்தைச் சுமார் 62,476 கோடி ரூபாயை இந்தியாவில் வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காகவே திட்டமிட்டு சீனா-வுக்கு அனுப்பியுள்ளது என அமலாக்கத் துறை கூறியுள்ளது.

சோதனை

சோதனை

அமலாக்க துறை விவோ நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய 23 நிறுவனங்களுக்குச் சொந்தமான 44 இடங்களில் செய்த சோதனையில் பல்வேறு நிறுவனங்களுக்குச் சொந்தமான 119 வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.465 கோடி மதிப்புள்ள பணம், ரூ.73 லட்சம் ரொக்கம் மற்றும் 2 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

போலி ஆவணங்கள்

போலி ஆவணங்கள்

விவோவுடன் தொடர்புடைய ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சோலன் என்னும் நிறுவனத்தின் சீன இயக்குநர்கள் இருவர் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர். சோலன் என்னும் நிறுவனத்தின் இயக்குநர்கள் இருவரும் சீன நாட்டவர்கள், போலி ஆவணங்கள் மூலம் இந்திய நிறுவனங்களில் இயக்குநர்களாக ஆக்கப்பட்டுள்ளனர் எனப் பிஸ்னஸ் இன்சைடர் தெரிவித்துள்ளது.

வழக்கு

வழக்கு

இதே வேளையில் அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும் முடிவு செய்துள்ளது.

30 பிராண்டுகள்

30 பிராண்டுகள்

விவோ, ஆடி சொகுசு கார்கள், அமெரிக்கன் டூரிஸ்டர் லக்கேஜ், பூமா, டிஸ்ஸாட் வாட்ச்கள், மைந்த்ரா ஃபேஷன், கோ டிஜிட் பொதுக் காப்பீடு மற்றும் ஹைபரைஸ் ஆரோக்கியம் உள்ளிட்ட 30 பிராண்டுகளுக்குப் பிராண்ட் அம்பாசிட்டராக உள்ளார். இந்தியாவின் அதிகச் சம்பளம் வாங்கும் செலிபிரிட்டியாக உள்ளார் விராட் கோலி.

9 மாதத்தில் வெடிக்க காத்திருக்கும் டைம் பாம்.. நிர்மலா சீதாராமன் திட்டம் என்ன..?!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Virat Kohli’s Vivo Mobiles advertisements stopped telecasting television and social media platforms

Virat Kohli’s Vivo Mobiles advertisements stopped telecasting television and social media platforms விராத் கோலி-க்கு வந்த பிரச்சனையைப் பாத்தீங்களா.. பாவம் மனுஷன்..!

Story first published: Saturday, July 9, 2022, 20:29 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.