திருமலை: ஒய்எஸ்ஆர் காங். கட்சி தலைவராகவும் ஆந்திர முதல்வராகவும் இருப்பவர் ஜெகன்மோகன். ஆந்திராவை தொடர்ந்து தெலங்கானாவிலும் ஆட்சியை கைப்பற்ற ஒய்எஸ்ஆர். காங். முயற்சி செய்து வருகிறது. அதற்கேற்ப சில ஆண்டுகளுக்கு முன் ஜெகன்மோகனின் தங்கை ஷர்மிளா, தெலங்கானா ஒய்எஸ்ஆர் கட்சியை ஐதராபாத்தில் தொடங்கினார். ஆனால் கொரோனா பிரச்னை காரணமாக கட்சி வளர்ச்சி பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் பாத யாத்திரை மூலம் தனது கட்சி வளர்ச்சி பணியில் இறங்கியுள்ளார்.இந்நிலையில் ஒய்எஸ்ஆர்.காங் கட்சியின் கவுரவ தலைவராக ஜெகன்மோகனின் தாய் விஜயம்மா பதவி வகித்து வந்தார். இவர் நேற்று திடீரென ராஜினாமா செய்தார். தனது மகள் ஷர்மிளாவுக்கு துணையாக தெலங்கானாவில் கட்சி வளர்ச்சி பணியை மேற்கொள்ள உள்ளதாக நேற்று குண்டூரில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார். இதன்பின்னணியில் பாஜக உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான ஆளும் டிஆர்எஸ் கட்சி வலுவாக உள்ளது. அவருக்கு ஓவைசியின் (எம்ஐஎம்) கட்சி மறைமுக ஆதரவளித்து வருகிறது. சில தேர்தல்களில் ஓவைசி கட்சியின் செல்வாக்கு மிக்க வேட்பாளர் போட்டியிடும் இடங்களில் டிஆர்எஸ் கட்சி போட்டியிடாமலும் தவிர்த்துள்ளது. இந்நிலையில் பாஜக, தெலங்கானாவில் கால் ஊன்ற முயற்சித்து வருகிறது. அதற்கு ெஜகனின் உதவி தேவைப்படுவதால் பாஜகவின் ஆலோசனைப்படிதான் ஷர்மிளா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் களம்இறங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஷர்மிளாவின் அரசியல் பிரவேசத்தால் சந்திரசேகரராவ் கடும் ஆத்திரமடைந்துள்ளார். அதற்கு முன்பு வரை பாஜவுடன் சுமூக உறவு வைத்திருந்த சந்திரசேகரராவ், தற்போது பாஜவை கடுமையாக சாடி வருகிறார். பாஜகவின் கணக்குப்படி ஷர்மிளா தெலங்கானாவில் கட்சியை தொடங்குவதால், அங்கு பாஜகவும் தனியாக களம் இறங்கும். இதன்மூலம் சிறுபான்மை ஓட்டுகள் சிதறும். அதேவேளையில் சந்திரசேகரராவுக்கு ஓட்டு வங்கி சிதறி பாஜ மற்றும் ஷர்மிளாவின் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்கும். இதன்மூலம் தேர்தலுக்கு பின்னர் ஷர்மிளா மைனாரிட்டி ஆட்சி அமைத்தாலும் பாஜ கை கொடுத்து கூட்டணி ஆட்சியில் பங்கேற்கும் என ெதரிகிறது.எனவே விஜயம்மாவை பாஜகவின் ஆலோசனைப்படிதான் ெஜகன், தெலங்கானாவில் களம் இறக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆந்திராவில் ஜெகன் கட்சி தனித்து ஆட்சியமைத்தாலும் பாஜகவை அவர் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் இதுவரை விமர்சித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.பன்றிக் கூட்டமாக வேண்டாம்; சிங்கத்தை எதிர்க்க சிங்கிளா வாங்க: நடிகை ரோஜா சவால்ஆந்திர மாநிலம் குண்டூரில் நேற்று நடந்த ஒய்எஸ்ஆர் கட்சியின் கூட்டத்தில் மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும் நடிகையுமான ரோஜா ேபசியதாவது: அடுத்த சட்டமன்ற தேர்தலில் நாங்கள் (ஒய்எஸ்ஆர் கட்சி) தனியாக களம் இறங்க உள்ளோம். இந்த கூட்டத்தில் இருந்து ஒரு சவால் விடுகிறேன். முன்னாள் முதல்வர் சந்திரபாபு, நடிகர் பவன்கல்யாண் ஆகியோரும் அடுத்த ேதர்தலில் தனியாக நிற்கவேண்டும். ‘தில் இருந்தால் தனியாக நின்றுபாருங்கள். இங்கு சிங்கம் (ஜெகன்) அமர்ந்துள்ளது. இதனை எதிர்க்க பன்றிக்கூட்டம் போல கூட்டு சேர்ந்து வராதீர்கள்’ என்றார். இதனை முதல்வர் ஜெகன் புன்னகைத்தபடி ரசித்துக்கொண்டிருந்தார்.