தேர்தல் பிரச்சாரத்தின்போது துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் உருவப்படத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அஞ்சலி செலுத்தினார்.
டெல்லியில் உள்ள ஜப்பான் தூதரகத்திற்கு நேரில் சென்ற ஜெய்சங்கர், இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் சடோஷி சுஸூகியிடன் தனது இரங்கலை தெரிவித்தார்.