ஸ்மார்ட்போனை அருகில் வைத்து கொண்டு தூங்கினால் என்னவெல்லம் நடக்கும் தெரியுமா?


செல்போன் இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்ற நிலைக்கு பலர் வந்துவிட்டனர் என கூறினால் அது மிகையாகாது…!

நம் கைக்கு எட்டும் தூரத்திலியே செல்போன் இருக்கவேண்டும் என்ற எண்ணம் நமக்குள் வளர்ந்து விட்டது.

ஸ்மார்ட்போனை நமது அருகிலேயே வைத்து கொண்டால் உடலுக்கு பல்வேறு ஆபத்துகள் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆண்கள் தங்கள் பேண்ட் பாக்கெட்களிலும், பெண்கள் மார்புக்கு அருகிலும் செல்போனை வைக்கின்றனர். இது மிகவும் ஆபத்தான ஒரு பழக்கமாகும். செல்போனால் ஏற்படும் கதிரியக்கங்கள் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த இடங்களில் செல்போனை வைப்பது ஆண்களுக்கு ஆண்மைக்குறைவும், பெண்களுக்கு மார்பக புற்றுநோயும் ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

ஸ்மார்ட்போனை அருகில் வைத்து கொண்டு தூங்கினால் என்னவெல்லம் நடக்கும் தெரியுமா? | Smartphone Mobiles Bed Health Tamil

LordHenriVoton (iStock)

செல்போன் உங்கள் உடலை விட்டு தள்ளியிருக்கும் சிறிய தூரம் கூட பெரிய மாற்றத்தை உண்டாக்கும். முடிந்தளவு ப்ளூடூத் ஹெட் செட்டை பயன்படுத்தவும். ஏதாவது தரவிறக்கம் செய்யும்போது போனை விட்டு தள்ளியே இருங்கள். செல்போனை எப்பொழுதும் கைப்பை அல்லது தோள்பைகளில் வைக்க பழகுங்கள்.

இரவு தூங்கும்போது படுக்கைக்கு அருகிலோ அல்லது தலையணைக்கு அடியிலோ செல்போனை வைத்து தூங்கும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். அந்த சமயங்களில் ஏற்படும் கதிரியக்கம் உங்கள் மூலையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் மூளையில் கட்டி ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே குறைந்தது 5 அடியாவது செல்போனை தள்ளி வைக்கவும்.

இரவு நேரத்தில் உறங்கும் முன் முழு இருளில் செல்போன் பார்ப்பதால் செல்போனில் இருந்து வரக்கூடிய வெளிச்சம் நம் கண்களில் இருக்கக்கூடிய நுண்ணிய நரம்புகளை தளர்வடைய செய்து பாதிப்படைய செய்கிறது.

செல்போனை உங்கள் அருகில் வைத்துக்கொண்டு தூங்கும்போது அது வெளிவிடும் கதிரியக்கம் உங்கள் உடலில் மெலடோனின் ஹார்மோனில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த ஹார்மோன்தான் உங்கள் நிம்மதியான தூக்கத்திற்கு காரணமாக அமைகிறது. இதில் பாதிப்பு ஏற்படும்போது அது உங்கள் தூக்கத்தை பாதிக்கும்.
 

ஸ்மார்ட்போனை அருகில் வைத்து கொண்டு தூங்கினால் என்னவெல்லம் நடக்கும் தெரியுமா? | Smartphone Mobiles Bed Health Tamil

candid.technology



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.