விஜயபுரா: கர்நாடக மாநிலம், அந்தமான் நிகோபர் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 4.6 ஆக இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்வடைந்ததையடுத்து மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். கர்நாடகாவில் கடந்த 15 நாட்களில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 7.5க்கு மேல் பதிவாகினால் மட்டுமே பாதிப்பு அதிகளவில் இருக்கக்கூடும் என்றும் ஆதாலால் மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், தொடர் நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சியும், பீதியும் அடைந்துள்ளனர். அதேபோல அந்தமான் நிகோபர் தீவில் போர்ட் பிளேயர் நகரில் இருந்து 233 கிலோ மீட்டர் தென்கிழக்கே அதிகாலை 2.34 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 4.8 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கங்களால் எந்த பொருட்சேதமும், உயிர்சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.