Green Sky Facts: நீல வானம் பசுமையாக மாறிய அதிசயம்: இது வானவில் அல்ல: வானின் வண்ணம்

இயற்கை மர்மங்கள் நிறைந்தது, இது இப்படித்தான் என நீண்ட நாட்களாக தொடரும் இயற்கையில் திடீரென மாறுதல் ஏற்படும்போது ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்படுவதோடு, காரணம் என்ன என்ற அச்சமும் அதிகரிக்கிறது.

இயற்கையில், வானம் நீல நிறம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அமெரிக்காவில் திடீரென வானத்தின் வண்ணம், பச்சை நிறமாக மாறியது அனைவருக்கும் விசித்திரமான விஷயமாக இருந்தது.

இதன் பின் உள்ள காரணம் என்ன? ஏதாவது கெட்ட விஷயங்கள் நடைபெறுகிறதா என்று சாதாரண மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தாலும், அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிந்து, சமூக ஊடகங்களில் பதிவேற்ற மட்டும் தவறவில்லை.

தற்போது அமெரிக்காவின் பச்சை வானம் சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

இயற்கையான வானத்தில் வானவில் தோன்றும்போது பல வண்ணங்கள் தோன்றுவது மட்டுமே நமக்குத் தெரியும். ஆனால் வானின் நிறம் பசுமையாக மாறுவதற்கு காரணம் என்ன என்று மக்கள் குழம்பிப் போனார்கள்.

அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவில் திடீரென வானத்தின் நிறம் மாறுவதற்கு முக்கிய காரணம் டெரெகோ என்று வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வளிமண்டலத்தில் சூரிய ஒளி எவ்வாறு சிதறடிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து, புயலுக்கு முன் அல்லது புயலின் போது வானம் அசாதாரண நிறத்தைப் பெறலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த விசித்திரமான காட்சி இந்த வார தொடக்கத்தில் அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவில் காணப்பட்டது. 2022 ஜூலை 5ம் நாளன்று, வானம் திடீரென்று பச்சை நிறமாக மாறியது. வானத்தை பச்சையாக பார்த்த மக்கள் அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். 

மேலும் படிக்க | 30000 வயது மாமூத் கண்டுபிடிப்பு: கனடாவில் உறைந்த உயிரினம்

சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது
வானம் பச்சை நிறமாக மாறுவதற்கு முன், அப்பகுதியில் மணிக்கு 160 கிமீ வேகத்தில் காற்று வீசியது. வானம் பச்சை நிறமாக மாறிய சம்பவம் போக்குவரத்து துறையின் சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது.

இதற்கு முன்னதாக இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஸ்வீடனில் வானம் நீல நிறத்தில் இருந்து ஊதா நிறமாக மாறியது. ஊதா நிற வானம் தோன்ற காரணம் எல்.ஈ.டி லைட் என்று பிறகு தெரியவந்தது.

தற்போது இந்த சம்பவத்தின் பல்வேறு புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதே சமயம் இந்த சம்பவத்தால் சிலருக்கு அச்சமும் வந்துள்ளது. வரும் நாட்களிலும் வானின் நிற மாற்றம் பற்றி நிறைய விவாதங்கள் நடக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

நிறம் மாறுவதற்கு பல காரணங்கள் உண்டு  
வளிமண்டலத்தில் சூரிய ஒளி எவ்வாறு சிதறடிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து, புயலுக்கு முன் அல்லது புயலின் போது வானம் ஒரு அசாதாரண நிறத்தைப் பெறலாம் என்று வானிலை ஆய்வாளர் பீட்டர் ரோஜர்ஸ் பத்திரிக்கைகளிடம் தெரிவித்தார்.

அப்போது,. பகலில் வானம் முற்றிலும் கருப்பு நிறமாக மாறும் அல்லது புயலின் போது ஊதா நிறமாக மாறும். டெரெகோவின் தீவிரம் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையது என்று விஞ்ஞானிகள் நம்புவதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. 

மேலும் படிக்க | விசித்திரமான நகரம்: மொபைல் தொலைகாட்சி ரேடியோ மற்றும் பொம்மைகளுக்கும் தடை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.