Elon musk cancelled twitter deal: டெஸ்லா நிறுவனரும், உலகின் பெரும் செல்வந்தர்களில் ஒருவருமான எலான் மஸ்க் சமீபத்தில் பிரபல் மைக்ரோ பிளாகிங் தளமான ட்விட்டரை வாங்க ஒப்புக்கொண்டார். இதற்கான ஒப்பந்த தொகையாக ரூ.3.3 லட்சம் கோடி நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த சூழலில், ட்விட்டர் நிர்வாகத்திடம், தளத்தில் உள்ள Bot கணக்குகள் குறித்து மஸ்க் அறிக்கை கேட்டிருந்தார். உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல் சரியானது அல்ல என மஸ்க் தெரிவித்தார்.
இந்த சூழலில், திடீரென ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இது உலகளவில் பங்கு சந்தை முகமைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், டெக் வல்லுநர்கள் இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
போட்டி போட்டு வாட்ஸை ஏத்தும் செல்போன் நிறுவனங்கள் – Infinix Zero Ultra 180W சார்ஜிங் உடன் வருதாம்!
என்ன நடந்தது?
Twitter-க்கு நெருக்கடியை Elon Musk கொடுத்திருந்தார். ட்விட்டரின் ஒப்பந்தத்திற்கான கோப்புகளில் வழங்கப்பட்ட தகவல்தான் இந்தக் குழப்பங்களுக்கு எல்லாம் காரணம்.
பராக் அகர்வால் சரியாக ஆதாரம் அளிக்காததே காரணம் என்று முன்னதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. சரி, எலான் மஸ்க் எந்த ஆதாரத்தைக் குறித்து கேட்டார் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
எலான் மஸ்க் முன்னதாக பதிவிட்டிருந்த ட்வீட்டில், “ட்விட்டருக்கான எனது சலுகை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டதை அடிப்படையாகக் கொண்டது. ட்விட்டரின் தலைமை செயல் அலுவலர், ஒப்பந்தத்தில் கூறியபடி, பாட்கள் 5% விழுக்காட்டிற்கும் குறைவாக இருப்பதற்கான ஆதாரங்களை வழங்க மறுத்துவிட்டார். மேலும் அது நிரூபிக்கப்படும் வரை ஒப்பந்தம் தொடராது.” என்று தெரிவித்திருந்தார்.
இனி சுதந்திரமாகப் பேசலாம் – ட்விட்டர் கடந்து வந்த பாதை!
ட்விட்டர் ஒப்பந்தம்
எலான் மஸ்க் ஏப்ரல் மாதம் ட்விட்டரை ரூ.3.3 லட்சம் கோடி கொடுத்து வாங்க ஒப்புக்கொண்டார். தளத்தில் உள்ள பாட்களின் எண்ணிக்கை அல்லது ஸ்பேம் கணக்குகள் குறித்த விவரங்கள் வழங்கப்படாததால், ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது.
ட்விட்டர் இரண்டு மாதங்களுக்கு முன்னதாக தாக்கல் செய்த ஒரு அறிக்கையில், ட்விட்டரில் 5% விழுக்காடு மட்டுமே பாட்கள் அல்லது ஸ்பேம் கணக்குகள் உள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இதனை ஒத்துக்கொள்ளாத Tesla நிறுவனர் Elon Musk, அதற்கான ஆதாரங்களைக் கேட்டு ஒப்பந்தத்தை தற்காலிமாக முடக்கியதைத் தொடர்ந்து, இப்போது முழுவதுமாக ஒப்பந்தத்தை ரத்துசெய்து வெளியேறி உள்ளார்.
Nothing Phone (1) Price: நத்திங் போன் (1) விலை வெளியாகியது… அதிர்ச்சியில் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள்!
தொடரும் விமர்சனங்கள்
“மஸ்க் என்ன கூறினாலும், ட்விட்டர் பாட்கள் அல்லது ஸ்பேம் கணக்குகள் காரணமாக இந்த ஒப்பந்தம் முடிவடையவில்லை. எலான் மஸ்கின் ஒழுங்கற்ற நடத்தை, தடாலடி அறிவிப்புகள், மோசமான வணிக முடிவுகளால் இந்த ஒப்பந்தம் ரத்தாகியுள்ளது,” என்று இடதுசாரி சார்பு லாப நோக்கமற்ற கண்காணிப்புக் குழுவான மீடியா மேட்டர்ஸின் தலைவர் ஏஞ்சலோ காருசோன் மஸ்க்கின் ட்விட்டர் முயற்சியை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.