அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. அதை சமயத்தில் ஓபிஎஸ் அதிமுக பொது குழு கூட்டத்திற்கு தடைக்குரிய வழக்கின் தீர்ப்பும் நாளை காலை 9 மணிக்கு வரவுள்ளது.
இந்த தீர்ப்பில் அதிமுக பொது குழு கூட்டத்திற்கு ஏதேனும் நிபந்தனைகள் அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்த போதிலும் அதிமுகவின் பொதுக்குழுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள திருமண மண்டபத்தில் பொதுக்குழுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், பொதுக்குழு கூட்டத்தில் வைக்கக்கூடிய பேனர்கள் மற்றும் கட்-அவுட்களில் யார் யார் புகைப்படங்கள் இடைபெறும் என்பது குறித்த செய்திகள் வெளியாகி உள்ளன.
அதன்படி, இந்த பொதுக்குழு கூட்டத்தில் அறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா, எடப்பாடி கே பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் புகைப்படமும் இதில் இடம் பெற்றுள்ளது. இவர்தான் இந்த பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார் என்பதால், அவருடைய புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.
அதே சமயத்தில் அதிமுகவின் பொதுக்குழு மேடையில் வைக்கப்படக்கூடிய அந்த பேனரில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்கள் இடம் பெறவில்லை. மாறாக அறிஞர் அண்ணா, ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகிய மூவர் படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. மற்ற புகைப்படங்களும் இதில் இடம் பெறவில்லை.