அதிமுகவின் பொதுச் செயலாளரின் முகாம் அலுவலகம் என்ற பெயரில் சசிகலா விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்திருந்தாவது,
“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிடர் கழகம் இணைப்பு விழா”
புரட்சித்தாய் சின்னம்மா அவர்களின் சீரிய தலைமையில், தாய் கழகமான, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடு, அண்ணா திராவிடர் கழகத்தை இணைக்கும் விழா வருகின்ற செவ்வாய்க்கிழமை (12-07-2022) அன்று காலை 11.00 மணிக்கு, தஞ்சாவூரில் அமைந்துள்ள தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நிகழ்ச்சியில், கழக நிர்வாகிகள் , கழக முன்னோடிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெரும் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்படிக்கு கழகப் பொதுச் செயலாளரின் முகாம் அலுவலகம் அஇஅதிமுக”
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் நிலவும் குழப்பங்களுக்கு மத்தியில், சசிகலா ஒரு பக்கம் நான் தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று சொல்லி வருவது வழக்கம் தான் என்றாலும், நாளை அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ள நிலையில் இந்த அறிவிப்பு அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.