அமர்நாத் யாத்திரையில் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 40 பேரை ஹெலிகாப்டர்கள், டிரோன்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப கருவிகளுடன் தேடும் பணி இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.
மேக வெடிப்பை தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 16 யாத்ரீகர்கள் உயிரிழந்த நிலையில் 65 பேர் படுகாயமடைந்தனர்.
இரவு, பகலாக தொடரும் மீட்புப் பணியில் வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், முகாம்களில் தங்கியுள்ள 15,000 யாத்ரீகர்கள் அமர்நாத் யாத்திரை செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.