அதிமுகவின் இரண்டாவது பொதுக்குழு நாளை சென்னை, வானகரத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் பொதுக்குழுவுக்கான பேனர்கள் தயாராகி வருகிறது. பொதுக்குழு நடைபெறும் பகுதியில் பேனர்கள் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஓ. பன்னிர் செல்வத்தின் புகைப்படங்கள் பேனர்களில் இடம் பெறவில்லை.
அதிமுகவில் இரட்டை தலைமை விவகாரம் பெரிதாக உருவெடுத்தது. அதிமுகவை சரியான வகையில் நிர்வாகம் செய்ய ஒற்றை தலைமை தேவை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இந்நிலையில் ஜூன் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அந்தப் பொதுக்குழுவில், எல்லா தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டு, ஒன்றை தலைமை தொடர்பன தீர்மானம் மற்றுமே பேசப்பட்டது, சட்டபடி பொதுக்குழு நடைபெறவில்லை என்றும் இதனால் பொதுக்குழுவை புறக்கணிப்பதாக கூறிவிட்டு ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறினர்.
இதைத்தொடர்ந்து 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு நடைபெறும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது பொதுக்குழு நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில், ஓ.பன்னீர் செல்வம் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு உள்கட்சி விவகாரம் தடை விதிக்க இயலாது என்று தீர்ப்பளித்தனர்.
இந்நிலையில் பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொதுக்குழுவுக்கான பேனர்களில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணாதுரை ஆகியோரின் படங்கள் இடம் பெற்றிருந்தது. அதிமுக திருவள்ளூர் மத்திய மாவட்ட கழகம் நிர்வாகியின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. ஆனால் பன்னீர் செல்வத்தின் புகைப்படம் இடம்பெறவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.