பெங்களூரு : கர்நாடகாவின் முதல் இரும்பு மேம்பாலம் பணிகள் முடிவடைந்துள்ளது. ஆகஸ்ட் 15ல் பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க, பெங்களூரு மாநகராட்சி தயாராகி வருகிறது. பெங்களூரு சிவானந்த சதுக்கத்தில், வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், இரும்பு மேம்பாலம் கட்ட, பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டது.
திட்டத்துக்காக மரங்கள் வெட்டப்படுவதற்கும், நிலம் கையகப்படுத்துவதற்கும் கேள்வியெழுப்பி சிலர், கர்நாடக உயர்நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தனர்.வாதம், பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதிமன்றம், இரும்பு பாலம் கட்ட அனுமதியளித்தது. 2017 ஜூனில் துவங்கிய பணிகள், பல்வேறு காரணங்களால் தாமதமாக முடிவடைந்துள்ளது. மேம்பாலத்துக்காக பட்ஜெட்டில், 19 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
பணிகள் தாமதமானதால், செலவு 40 கோடி ரூபாயாக அதிகரித்தது. 4,560 அடி தொலைவிலான இரும்பு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.இதனை ஆகஸ்ட் 15ல், பொது மக்களின் பயன்பாட்டுக்கு, திறந்து வைக்க மாநகராட்சி தயாராகி வருகிறது. மேம்பாலம் திறக்கப்பட்டால், மெஜஸ்டிக், சாளுக்கியா சதுக்கம், விதான்சவுதா, மல்லேஸ்வரம் என, மற்ற பகுதிகளுக்கு, வாகன பயணியர் சுமூகமாக செல்லலாம்.ரேஸ் கோர்ஸ் ரோட்டிலிருந்து, எந்த சிக்னலும் இல்லாமல், விரைவில் சேஷாத்திரிபுரம் செல்ல, மேம்பாலம் உதவியாக இருக்கும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement