இதுவரை இல்லாத அளவு; 2020-2021 நிதியாண்டில் இந்திய பாதுகாப்புத் துறையின் ஏற்றுமதி எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் பாதுகாப்புத் துறை சார்ந்த தொழில்நுட்பங்கள், சாதனங்களை பொதுத்துறை மற்றும் தனியார்த்துறை நிறுவனங்கள் உற்பத்தி செய்து வருகின்றன. அவற்றை இந்தியா மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவாய் ஈட்டி வருகிறது.

இந்த நிலையில், 2021-2022 ஆண்டுக்கான வருவாயைப் பாதுகாப்பு உற்பத்தித் துறையின் (Dept Of Defence production) செயலாளர்களான அஜய்குமார், சஞ்சய் ஜாஜூ இருவரும் வெளியிட்டிருக்கின்றனர். அதன்படி 2021-2022 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 13,000 கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டுகளை விடவும் அதிகமாகும். கடந்த 2020-2021 நிதியாண்டில் 8,430 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி நடைபெற்றது.

இதில் தனியார்த்துறை நிறுவனங்களின் பங்களிப்பு 70 சதவிகிதம் எனவும், பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு 30 சதவிகிதம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை பங்குகள் 30 சதவிகிதமாக அதிகரிக்க பிலிப்பைன்ஸ் நாட்டுடன் செய்துகொண்ட பிரமோஸ் ஏவுகணைகளின் ஒப்பந்தம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியா முக்கியமாக அமெரிக்கா, ஆப்பிரிக்க, தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்துள்ளது. விமானம் மற்றும் ட்ரோன்களின் உடற்பகுதி என அழைக்கப்படும் `Fuselages’ இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு, அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்திய ராணுவ வாகனம்

நாளை டெல்லியில் உள்ள விக்யான் பவனில் பாதுகாப்புத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “Artificial intelligence in Defence (AIDef)” என்ற நிகழ்ச்சியில் 75 பாதுகாப்புத் துறை சார்ந்த AI தொழில்நுட்பங்கள் வெளியிடப்படவுள்ளன. இதில் ஒரு பொதுத்துறை மற்றும் ஒரு தனியார்த்துறை நிறுவனத்துக்கு விருதுகள் கொடுத்துச் சிறப்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.